விழி கிடைக்குமா – vizhi kidaikkuma

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உ ணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

Advertisements

One thought on “விழி கிடைக்குமா – vizhi kidaikkuma

  1. ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
    உ ணக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
    please check the spelling should it not be
    உ னக்கென்றே உனக்காக எனை ஆக்குவேன்
    அருணாசலம்

Comments are closed.