one word fun by kalamega pulavar

one word fun by kalamega pulavar

காக்கைகா காகூகை,  
           கூகைக்கா  காகாக்கை 
கோக்குக்கூ  காக்கைக்குக் 
           கொக்கொக்க — கைக்கைக்குக் 
காக்கைக்குக் கைக்கைக்கா  கா  

 

காக்கைக்கு    —    காக்காவிற்கு
ஆகா  கூகை     —  ஆந்தையைப்  பிடிக்காது.  ஒத்துப்போகாது.
கோக்கு     –            கோ  ​ என்றால்  அரசன்.
கூ                      =      பூமி,  அவன்  நாடு,
காக்கை         –       காப்பது   அரசாள்வது
கொக்கொக்க —   கொக்கைப்  போன்று
கைக் கை         –    விரோதிகளை வென்று
கா                             காப்பது.

கோர்வையாகச்  சொன்னால்  காக்கைக்கு  இரவில்  கண்  தெரியாது.  ஆந்தைக்கு  பகலில்  கண் தெரியாது  ரெண்டுக்கும்   நட்பு கிடையாது  காக்கையை விட  ஆந்தை   பலம் கொண்டது.  எனவே  காக்கை  தனக்கு  சாதகமான  பகலில்  ஆந்தையை   விரட்டும்.
ஒரு ராஜாவுக்கு தனது நாட்டைக்காப்பது  இன்றியமையாதது. எதிரிகளை  எப்படி  கொக்கு  நிதானமாக காத்திருந்து  உறுமீன்  வந்தவுடன்  சட்டென்று  அதைக் கவ்வுமோ  அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில்  அவன் மேல் படை எடுத்து வென்று   நாட்டைக் காப்பது  அவசியம்  என்று  பொருள். ,

 

Advertisements

Murga Sloka by kalamega pulavar

Fun sloka by kalamega pulavar

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

பழனியில்  முருகனை  வேண்டுகிறார்  காளமேகம்.
எனக்கு  இந்த பெரும்  உடம்பு (பெருங்காயம்) வேண்டாம். சீரான  உள்ளத்தை, மனதை தந்தால் போதுமே. (சீரகம்)  இந்த  உபயோகமற்ற  உடல் (வெங்காயம்)  சுருங்கி சக்தியிழந்து
பிரயோசனமில்லாமல்  இருந்து  என்ன பயம் (சுக்கானால்,  வெந்தயத்தால் )  எதற்கு இந்த   சரக்கை (நாட்டு  மருந்து) இதை நான் சுமக்கவேண்டும். இந்த  தத்துவப்பாடலில்
வெங்காயம், சீரகம், சுக்கு, வெந்தயம், என்ற பலசரக்கு  வரும்  அழகை  ரசிக்கலாம்

one word sloka by kalamega pulavar

”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?”

பாடியவர்: காளமேகப் புலவர்
வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?

தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்
துதைது – அடுத்த பூவுக்குச் சென்று
அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்
தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?
இன்னொரு அதிசயப்பாடல்:

”தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி”

பாடியவர்: காளமேகப் புலவர்
தாதி – தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது – நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது – தூதுப் பணியில் தூதை
ஓதாது – (திறம்பட) ஓதாது!
தூதி தூது – தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே – நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தேதுதித்த – தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து – தொடர்தலும்
தீது – தீதாகும்
தாதொத்த – (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி – தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தித்தித்தது _ எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி – ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!

=============================================

 

 

one word sloka kandar anuboothi

one word sloka by
அருணகிரிநாதர் எழுதிய கந்தரனுபூதியில் 54 வது பாட்டு.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே. 54

அதிசயம், அருபுதம், ஆனந்தம் எல்லாமே உங்களுடையதுதான்.

திதத்தத்தத் தித்தத் திதித்தித்த என்னும் ஜதி, தாளங்களால் நடமிடும் சிவனும், வெண்ணெய் , பால், தயிர் உண்து, ச்ரம பரிகாரத்துக்கு, பாற்கடலில், மெத்து மெத்தென்று வழ வழ உடல் கொண்ட ஆதிசெஷனைப் பாயாக கொண்ட விஷ்ணுவும், பிரம்மாவும் தொழுது நிற்கின்ற முதல்வனே, முருகனே, தேவானை மணாளா, என் உடல் இருக்கிறதே அது ஜனன மரணத்துக்கு ஏதுவாக , எலும்பு போன்ற தாதுக்கள் நிறைந்ததாயிற்றே. அது தீயில் வேகும்போதாவது உன்னைத் துதிக்கும்படி என் புத்திக்கு அறிவுரை தந்து அது உனது திருவடியினை சரணடைய ஆட்படுத்துவாயாக என்பது தான் மேலே கண்ட நேரடலான பாடலின் பொருள்

பெருமாள் ஸ்தோத்திரம்- Popular perumal Slokas

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின் உள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண் புரைக்க மாட்டேனே!
==================================top

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!
==================================top

அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக்கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனிஎன்கோ பால் என்கேனோ
==================================top

பச்சைமாமலை போல் மேனிபவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகருளானே.
==================================top

கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூசிப்போம்
==================================top

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம்செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னை யடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பெருமானை வனங்கு!
==================================top

 

அம்மன் ஸ்தோத்திரம்- Popular Ambal Slokas

அம்மன் ஸ்தோத்திரம்- Popular Ambal Slokas

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே
==================================top

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே
==================================top

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த் தால் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளேஉமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே

==================================top

மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல்கற்பகக் காமினியே!
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி
==================================top

தனந்தரும் கல்விதரும் , ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாந்தரும், அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
==================================top

துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே
==================================top

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே; கறைகண்டவனுக்கு
மூத்தவளே; என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

==================================top

 

முருக ஸ்தோத்திரம்- Popular Muruga Slokas

முருக ஸ்தோத்திரம்- Popular Muruga Slokas

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்

==================================top

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்
==================================top

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி – காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி – அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

==================================top

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே.
நாளென் செய்யும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செய்யுங் குமரே சரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
==================================top

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்
==================================top

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே!
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
==================================top

வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
==================================top