குரு பாதுகா ஸ்தோத்திரம்

குரு பாதுகா ஸ்தோத்திரம்

அனன்தஸம்ஸார ஸமுத்ரதார னௌகாயிதாப்யாம் குருபக்திதாப்யாம்
வைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

கவித்வவாராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்யதாவாம் புதமாலிகாப்யாம்
தூரிக்றுதானம்ர விபத்ததிப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

நதா யயோ ஸ்ரீ பதிதாம் ஸமீயு: கதாசிதப்யாஷ்ர தரித்ரவர்யா:
மூகார்ஷ வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

நாலீகனீகாஷ பதாஹ்றுதாப்யாம் நானாவிமோ ஹாதி நிவாரிகாப்யாம்
நமஜ்ஜ நாபீஷ்ட ததிப்ரதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ந்றுபாலி மௌலி வ்ரஜரத்னகான்தி ஸரித்விராஜத் ஜஷகன்ய காப்யாம்
ந்றுபத்வ தாப்யாம் னதலோக பங்கதே: நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

பாபான்தகாரார்க பரம்பராப்யாம் தாபத்ரயா ஹீன்த்ர கஹேஷ்ர் வராப்யாம்
ஜாட்யாப்தி ஸம்ஷோஷண வாடவாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ஸமாதிஷட்க ப்ரதவைபவாப்யாம் ஸமாதிதான வ்ரததீக்ஷிதாப்யாம்
ரமாத வான்த்ரிஸ்திர பக்திதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

ஸ்வார்சா பராணாம் அகிலேஷ்ட தாப்யாம் ஸ்வாஹாஸ ஹாயாக்ஷ துரன்தராப்யாம்
ஸ்வான்தாச்ச பாவப்ரதபூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.

காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்றுதமோக்ஷ தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்

குரு பாதுகா ஸ்தோத்திரம்  அர்த்தம் 

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முடிவில்லா மறு பிறப்பில் இருந்து விடுதலை தரும் தோணி இது
குருநாதருக்கு தூய பக்தியை செலுத்தும் மனநிலையை தரவல்லது
இதை வணங்குவதின் மூலம் பட்டற்ற வாழ்வின் சாம்ராஜ்யத்தை அடைவேன்

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
முழு பௌர்ணமி நிலா போன்றதும் அறிவுக் கடலுமாகும் இந்த பாதுகை
நெருப்பு போன்ற துயரங்களையும் அழிக்கும் கருணை நீர் இது
சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்கள் அனைத்தையும் அழிக்க வல்லது.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தன்னை வணங்கித் துதிபவர்கள் ஏழைகள் என்றாலும்
அவர்களையும் செல்வந்தர்களாக்கும் சக்தி கொண்டது
ஊமைகளைகூட சக்தி மிக்க பேச்சாளராக்கும் வல்லமை கொண்டது

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
தாமரை மலர் போன்ற குருவின் பாதங்களை அலங்கரிக்கும் இது
வீண் ஆசைகளை அழித்து மனதை தூய்மை படுத்தும்
தூய்மையாகத் துதிபவர்கள் எண்ணங்களை நிறைவேற்றும்.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
மன்னனின் கிரீடத்தில் ஜொலிக்கும் மாணிக்கக்கல்
இது முதலைகள் சூழ்ந்த நதியில் ஜொலிக்கும் இளம் பெண் போன்றது
தன் பக்தனை மன்னனாகவே மாற்றும் சக்தி கொண்டது.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
கொடிய பாபங்களை ஒழிக்க வந்த ஆயிரம் சூரியன் போன்ற சக்தி கொண்டது
நச்சுப் பாம்புகளைப் போன்ற துயரங்களை அழிக்க வந்த ராஜா கருடனைப் போன்றது
கடல் போன்ற அறியாமையை பொசுக்க வந்த தீயைப் போன்றது.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
அளவற்ற ஆரறிவை அனைவருக்கும் தரவல்லது
மாணவனைப் போன்று வந்தவர்க்கும் பேரானந்த நிலையைத் தருவது
விஷ்ணுவின் பாதத்தை நிலையாக வணங்கும் சக்தி தரவல்லது.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
என்றென்றும் தம் பணியை செய்து கொண்டிருக்கும்
தம் சிஷ்யர்களின் தேவைகளை பூர்த்தி செய்து
ஆத்மா ஞானம் பெற்றிட வழி வகுக்கும் வல்லமை படைத்தது.

என் குருவின் பாதுகைகளுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்
மோகம் என்ற பாம்பினை அழிக்கவல்ல கருடனைப் போன்றது
பட்டற்ற மனநிலை, அளவற்ற அறிவு அனைத்தையும் தருவது
ஆத்மா ஞானத்தைப் பெற மனதார ஆசி தரும்
தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு விரைவாகவே முக்தி தரும்

 

துர்கா ஸுக்தம்

துர்கா ஸுக்தம்

ஜாதவேதஸே ஸுநவாம ஸோமமராதீயதோ நிதஹாதி வேத:

ஸ ந: பர்ஷ ததி துர்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்நி: (1)

அக்னி வடிவமாக விளங்கும் சக்திக்கு ஸோம ரசத்தை பிழிந்து தருவோம், அனைத்தையும் அறியும் அந்த சக்தி எனது பகைமைகளை பொசுக்கட்டும். அது எனது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும், கப்பலால் கடலைக் கடப்பது போல பாவக் கடலில் இருந்து அந்த அக்னி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

தாமக்நிவர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் வைரோசநிம் கர்மபலேச்ஷு ஜுஷ்டாம்

துர்காம் தேவீகும் சரண-மஹம் ப்ரபத்யே ஸுதரஸி தரஸே நம: (2)

செந்தீ வண்ணத்தினளும், தனது ஒளியால் எரிப்பவளும், ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கர்ம பலனை கூட்டி வைப்பவளுமான துர்கா தேவியை நான் சரணமடைகின்றேன். பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

அக்நே த்வம் பாரயா நவ்யோ அஸ்மாந் ஸ்வஸ்திபிரதி துர்காணி விஸ்வா.

பூஸ்ச ப்ருத்வீ பஹுலா ந உர்வீ பவா தோகாய தநயாய ஸம்யோ: (3)

அக்னி சக்தியே போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துகளின்றும் கரையேற்றுவிக்க வேண்டும். எங்களுக்கு வாசஸ்தலமும், விளை பூமியும் நிறைய அருள வேண்டும். புத்திரர்களும், பௌத்திரர்களும் அளிக்க வேண்டும்.

விஸ்வாநி நோ துர்கஹா ஜாதவேதஸ்-ஸிந்தும் ந நாவா துரிதா-திபர்ஷி

அக்நே அத்ரிவந் மநஸா க்ருணோ ஸ்மாகம் போத்யவிதா தநூநாம் (4)

ஆபத்தை போக்கும் அக்னி சக்தியே கப்பல் கடலைக் கடப்பது போல எங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் எம்மை கடத்துவிப்பாய். அக்னி சக்தியே அத்ரி மஹரிஷ’யைப்போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுகிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரக்ஷ’த்துக்கொண்டும் இருக்க வேண்டும்.

ப்ருதநா ஜிதகும் ஸஹமாந-முக்ர-மக்னிகும் ஹுவேம பரமாத்-ஸதஸ்தாத்

ஸ ந: பர்ஷததி துர்காணி விஸ்வா-க்ஷாமத் தேவோ அதி துரிதா-யக்நி: (5)

எதிரிகளின் சேனைகளை வெல்வதும், அடக்குவதும், உக்கிரமானவளுமான அக்னி சக்தியை பரமபதத்திலிருந்து அழைக்கின்றேன். இச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாக. அக்னி தேவன் நமது பாவங்களை போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.

ப்ரத்நோஷிக மீட்யோ அத்வரேஷு ஸநாச்ச ஹோதா நவ்யஸ்ச ஸத்ஸி

ஸ்வாஞ்சாக்நே தநுவம் பிப்ரயஸ்மபயம் ச சௌபகமாயஜஸ்வ (6)

அக்னியே யாகங்களில் போற்றப்பெறும் நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கர்ம பலனை அளிப்பதும் ஹோமத்தை செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படும் நீயே ஆகின்றாய். அக்னி சக்தியே உனது உடலையும் ஹவிஷ’னால் இன்புற செய்து எங்களுக்கும் எல்லா சௌபாக்கியங்களையும் அருள்வாயாக.

கோபிர்ஜுஷ்ட-மயுஜோ நிஷிக்தம் தவேந்த்ர விஷ்ணோ-ரநுஸஞ்சரேம

நாகஸ்ய ப்ருஷ்ட மபிஸம்வஸாநோ வைஷ்ணவீம் லோக இஹ மாதயந்தாம் (7)

இந்திரனிடம் விளங்கும் சக்தியே! பாவத்தொடர்பின்றி பாவமான பொருட்களைக்கூட அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னை சேவிக்கின்றேன். சுவர்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகில் இருக்கும் போது பேரின்பத்திற்குரியவனாக்குதல் வேண்டும்.

ஓம் காத்யாயநாய வித்மஹே கந்யகுமாரி தீமஹி

தந்நோ துர்கி: ப்ரசோதயாத் (காயத்ரீ)

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

கன்னியாகவும், குமரியாகவும் உள்ள தேவியை தியானிக்கின்றோம். பரமேஸ்வரனுக்காகவே தோன்றி பரமேஸ்வரனை மணந்த அவளை வழி படுகின்றோம். அந்த துர்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.