காணவேண்டாமோ

காணவேண்டாமோ – பாபநாசம் சிவன்

ராகம் – ஸ்ரீ ரஞ்சனி

காணவேண்டாமோ ஐயனை இரு கண்ணிருக்கும் 
போதே விண்ணுயர் கோபுரம்

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் 
மேதினி போற்றும் சிதம்பர தேவனை

வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து 
நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் 
கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்

Advertisements

Palindrome in epic

ராமாயணம்; மஹாபாரதம்!

நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!
ராமாயணம், மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.
18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.
காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.
தைவக்ஞர் சூரிய கவி
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.
ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II
-ஆறாவது ஸ்லோகம்
இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.
இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II
– 34வது ஸ்லோகம்
இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.
இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!
கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.
ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II
-ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:
மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II
பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.
இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II
– ஸ்லோகம்18
அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-
கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II
இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!
(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

 

அபிஷேகம் செய்தால் பலன்

அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன்

இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு  கீழ்கண்ட முறைப்படி  அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.
அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

அரிசி மாவு – மல நாசம் மலம் என்பது தீவினைகள்

மஞ்சள் பொடி -ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.

பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.

ரசபஞ்சாம்ருதம் – கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி

பல(பழ)பஞ்சாமிர்தம் – தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்.

பால் – தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்.

தயிர் – குழந்தைப்பேறு உண்டாகும்.

நெய் – மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.

தேன் – வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.

கருப்பஞ்சாறு – நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.

சர்க்கரை – சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.

வாழைப்பழம் – தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.

பலாப்பழம் – எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.

எலுமிச்சம்பழம் – ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.

அன்னம் – ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.

இளநீர் – அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.

பச்சைக்கற்பூரம் – பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.

கஸ்தூரி – ஜயம் வெற்றி தரும்.

பன்னீர் – சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.

சந்தனக்குழம்பு – சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.

Mahadev Temple-Vadodara

Mahadev Temple-Vadodara- Gujarat

Stambheshwar Mahadev Temple is situated about 40 miles from Vadodara in the small town of Kavi Kamboi of Gujarat. It is located within the Bay of Khambhat in the Arabian Sea. This temple of Lord Shiva can only be visited during the low tide hours. In the hours of high tides it remains mostly submerged. People flock this temple in large numbers to witness the event of submerging or reemerging of the temple from the sea. It’s a surprise that despite remaining in water the temple is still the same.

முருகன் குறித்த பழமொழிகள்

முருகன் குறித்த பழமொழிகள்
·         வேலை வணங்குவதே வேலை.
·         சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லைசுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
·         வயலூர் இருக்க அயலூர் தேவையா?
·         காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
·         அப்பனைப் பாடிய வாயால் – ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
·         முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
·         சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
·         கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
·         கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
·         பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
·         சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
·         செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
·         திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
·         வேலனுக்கு ஆனை சாட்சி.
·         வேலிருக்க வினையுமில்லைமயிலிருக்கப் பயமுமில்லை.
·         செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
·         கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

Kamakshi Amman Virutham-காமாக்ஷி

கணபதி காப்பு
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே
திங்கட்புயமருவும் பணி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்கயமுகன் ஐங்கரன்
இருதாள் காப்பு.
1.சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரிஜோதியாய் நின்ற உமையே
சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்துன்பத்தை நீக்கிவிடுவாய்
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்துயரத்தைப் மாற்றிவிடுவாய்
ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோசிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்கசிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரிசிரோன்மணி மனோன்மணியும் நீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரிஅனாத ரக்ஷகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.
2.பத்து விரல் மோதிரம்  எத்தனை ப்ரகாசமதுபாடகம் தண்டை கொலுஸும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்டபாதச் சிலம்பினொளியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்மோஹன மாலை அழகும்
முழுவதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்றசிறுகாது கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தைஅடியனால் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே!
[3]கெதியாக வந்துன்னைக்  கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீகுழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்கசாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடையமதகஜனை ஈன்ற தாயே
மாயனுடை தங்கையே பரமனது மங்கையேமயானத்தில் நின்ற உமையே
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்அன்பு வைத்து எனை ஆள்வாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.
[4]பூமியிற் பிள்ளையாய்ப்  பிறந்தும் வளர்ந்தும் நான்பேரான ஸ்தலமும் அறியேன்
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்போற்றிக் கொண்டாடி அறியேன்
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லிவாயினாற் பாடி அறியேன்
மாதா பிதாவினது பாதத்தைவணங்கி ஒருநாளுமே அறியேன் சாமியென்றே எண்ணிச்
சதுரருடன்
கைகூப்பிச்சரணங்கள் செய்தும் அறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டுசாஷ்டாங்க தெண்டன் அறியேன்
ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே
[5]பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான்பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்புருஷனை மறந்தனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல்பராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமல்பாங்குடனே இருப்பதம்மா
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாதுஇது தருமம் அல்லவம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகள் இல்லையோஇது நீதியல்லவம்மா
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோஅதை எனக்கு அருள்புரிகுவாய்.
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே
6]மாயவன் தங்கை நீ  மரகதவல்லி நீமணிமந்த்ரகாரி நீயே
மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீமலையரசன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீதயாநிதி விசாலாக்ஷியும் நீ
தாரணியில் பெயர் பெற்றபெரியநாயகியும் நீ
அத்தனிட பாகமதில் பேறு பெறவளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீபிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீஅகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.
[7]பொல்லாத பிள்ளையாய்  இருந்தாலும் பெற்ற தாய்புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறிநான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மாஇனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.
[8]முன்னையோர்  ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டிமோசங்கள் பண்ணினேனோ
என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலேஇக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்துஎன் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயேசிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்சிவசக்தி காமாக்ஷி நீ
அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்என் முன் வந்து நிற்பாய்
 அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே
[9]எந்தனைப் போலவே  ஜெனனம் எடுத்தவர்கள்இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்உன் பாதம் சாக்ஷியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்உலகந்தனில் எந்தனுக்குப்
பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்துஎன்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே
பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்காத்திடம்மா
அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்கஅட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே
10பாரதனில் உள்ளளவும்  பாக்கியத்தோடென்னைப்பாங்குடன் ரக்ஷிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்தபாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்றுவாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்னகவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி
“ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்தஎன் அன்னை ஏகாம்பரி
நீயே”அழகான காஞ்சியில்
புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.
11எத்தனை ஜெனனம் எடுத்தேனோ  தெரியாதுஇப்பூமி தன்னிலம்மா
இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனிஜெனனம் எடுத்திடாமல்
முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே
முன்பின்னும் தோணாத மனிதரைப் போலவே நீமுழித்திருக்காதேயம்மா
வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் யான் சொன்னவிருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தைவிமலனர் ஏசப்போறார்
அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும்குறையைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே

Saraswathi Sloka- To get good marks

பத்மபுராணத்தில் சரஸ்வதி தேவிக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையே ஒரு சம்பாஷணை நடக்கிறது. இந்த சம்பாஷணையை ஒரு ச்லோகவடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை காலையில் தினமும் பாராயணம் செய்யும் பள்ளிக்குழந்தைகளுக்கு வித்யாலாபம், பேச்சுவன்மை மற்றும் ராஜசம்மானமும் கிட்டும் என்று கூறப்படுகிறது. சரஸ்வதி தேவி அந்தக் குழந்தைகளில் தொண்டையில் வந்து வாசம் புரிவதாகவும் சொல்லப்படுகிறது. இதைச் சொல்லிக்கொடுத்து குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டத்தை ஏற்படுத்தலாம். அதற்கான ச்லோகம் –
ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்த்திதாம்।
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகரப்ரியாஸ்பதாம்।।1।।
மதிதாம் வரதாம் சுத்தாம் வீணாஹஸ்தவரப்ரதாம்।
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸகாரிணீம்।।2।।
ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
சுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் சுபாங்காம் சோபனப்ரதாம்।।3।।
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்।।4।।
இதி மாஸம் ஸ்துதானேன வாகீசேன மஹாத்மனா
ஆத்மானம் தர்சயாமாஸ சரதிந்து ஸமப்ரபாம்।।5।।
ஸரஸ்வதீ உவாச –
வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸி வர்த்ததே।।
ப்ருஹஸ்பதி –
வரதா யதி மே தேவி ஸம்யக் ஞானம் ப்ரயச்ச மே।।
ஸரஸ்வதீ –
இதம் தே நிர்மலம் ஞானம் அக்ஞானதிமிராபஹம்।
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக்வேதவிதோ நர:।।6।।
லபதே பரமம் ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா।।7।।
தேஷாம் கண்டே ஸதா வாஸம் கரிஷ்யாமி ந ஸம்சய:।।8।।
இதி ஸம்பூர்ணம்.

இந்த ச்லோகத்திற்கான தமிழ் அர்த்தம் –
ஜீவிதஹ்ருதயத்தில் இருப்பவளாயும், ப்ரம்ஹாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்பொழுதும் சந்திரனுக்கு ப்ரியமுள்ளவளாயும் பிரகாசிக்கும் ஸ்ரீசரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கிறேன்.
நல்லறிவை கொடுப்பவளாயும், உயர்ந்தவைகளைக் கொடுப்பவளாயும், பரிசுத்தமானவளாயும், கையில் வீணாவாத்யத்துடன் விரும்பியதைக் கொடுப்பவளாயும், ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ராம் என்ற மந்திரத்தில் ப்ரியமுள்ளவளாயும், கெட்டபுத்தியை நாசம் செய்பவளாயும், நல்ல ப்ரகாசத்துடன் கூடியவளாயும், யாரையும் சாராதிருப்பவளாயும், அக்ஞானமாகிற இருட்டைப் போக்குகிறவளாயும், வெண்மையாயும், மோட்சத்தை கொடுப்பவளாயும், மிக்க அழகியவளாயும், அழகான உடலோடு கூடியவளாயும், மங்களத்தைக் கொடுப்பவளாயும், தாமரையில் இருப்பவளாயும், காதுகளில் அழகிய தோடுகளை அணிந்தவளாயும், வெண்மை நிறத்துடன் மனதிற்கு ஸந்தோஷத்தை அளிப்பவளாயும், ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளாயும் விஷ்ணுவுக்கு ப்ரியையாயும் உள்ள ஸரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கின்றேன்.
இவ்வாறு ஒருமாத காலம் ஸ்ரீப்ருஹஸ்பதி பகவானால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட, சரத்காலசந்திரனுக்கொப்பான காந்தியோடு கூடிய ஸ்ரீவாக்தேவியானவள் அவருக்கு சொரூபத்துடன் காட்சி அளித்தாள்.
ஸ்ரீஸரஸ்வதி கூறியதாவது –
உன்னுடைய மனதில் விரும்பியதை வேண்டிக்கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
ஸ்ரீப்ருஹஸ்பதி பிரார்த்திப்பதாவது –
என்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய தேவி, எனக்கு நல்ல அறிவைக் கொடுத்து அருள்புரிவாயாக.
ஸரஸ்வதியின் அனுக்ரஹம் –
அக்ஞானமாகிற இருளைப்போக்கக்கூடிய பரிசுத்தமான ஞானம் உனக்குக் கிட்டும்.
நான்கு வேதம் அறிந்தவன் இந்த ஸ்தோத்திரத்தால் என்னை நன்கு ஸ்துதிசெய்தால் என் ஞானத்திற்கு ஒப்பான பரம உத்தம ஞானத்தை அடைகிறான். ப்ரதி தினம் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்கிறவர்களின் தொண்டையில் நான் வசிப்பேன் என்பதில் எந்தவொரு சந்தேஹமும் இல்லை.
மேற்குறிப்பிட்ட இந்த மந்திரத்துடன் ஆயுர்வேதமூலிகை மருந்தாகிய சாரஸ்வதக்ருதம் எனும் நெய்மருந்தை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அரை ஸ்பூன் சாரஸ்வதசூரணத்துடன் குழைத்து கால் ஸ்பூன் சுத்தமான தேனும் விட்டு நன்றாகக் கலந்து காலை, இரவு உணவிற்கு நடுநடுவே நக்கிச் சாப்பிடும்படி உபதேசிக்கவும். இதன்மூலம் தேவையற்ற வாக்குவாதம் செய்தல், கோபப்படுதல், மனஅமைதியில்லாதிருத்தல், படிப்பில் நாட்டமின்மை போன்றவை குறைந்து நற்குணத்துடன் வாழ்வில் முன்னேற வழிவகுக்கும்.