பிரதோஷம்

பிரதோஷம்

 

பிரதோஷம் என்றால் என்ன ?

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறைவளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம்சனிப் பிரதோஷம்என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால்மஹாப் பிரதோஷம்என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?


பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;


ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:

செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

 

Advertisements

ஈசன் உபதேசம்

ஈசன் உபதேசம்…
1, ஓமாம்புலியூர் –
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர் –
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம்
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர்
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம்
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர்
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம்
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம்
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள்
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர்
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர்
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம்
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம்
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம்
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர்
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர்
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர்
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

தாரித்ரிய தகன சிவ ஸ்தோத்திரம்.

தாரித்ரிய தகன சிவ ஸ்தோத்திரம்.

(அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி, சிவபெருமானிடம் வசிஷ்ட முனிவரால் பாடப் பட்டது )

விஸ்வேஷ்வராய நரகார்னவ தாரணாய
கர்ணாம்ருதாய சசி சேகர தாரணாய
கற்பூர காந்தி தவலாய ஜடா தராய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

அண்ட சராசரங்களின் தலைவனை, (பிறவி என்னும்) பெரும் நரகத்தைக் கடக்க உதவும் பெருமானை, அமுதம் போல் கருணை மழை பொழிபவனை, உச்சியில் பிறை நிலவைச் சூடியிருப்பவனை, கற்பூர ஜோதி போன்று வெண்மை நிறமுடையவனை, நீண்ட ஜடாமுடியோடு திகழும் எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

கௌரிப் ப்ரியாய ரஜனீஷ கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தனாய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

பார்வதி நாதனை, எல்லையில்லா இருள் சாம்ராஜ்ஜியத்தின் வளர்பிறையை சிரசில் அணிந்திருப்பவனை, காலனை அழித்த காலகாலனை, ராஜ நாகத்தைக் கங்கணமாக அணிந்திருப்பவனை, பொங்கும் கங்கையை ஜடையில் தரித்திருப்பவனை, கஜ ராஜனை அழித்து ஒழித்த எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

பக்தப் ப்ரியாய பவ ரோக பயாபஹாய
உக்ராய துர்க பவ சாகர தாரணாய
ஜோதிர் மயாய குண நாம ந்றுத்யகாய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

தன் பக்தர்களுக்கு மிகவும் பிரியமானவனை, நோய்களினால் வரும் துன்பத்தை நீக்கி அபயமளிப்பவனை, உக்கிரமானவனை, துன்பம் தரும் சம்சார சாகரத்தினின்று நம்மைக் கரையேற்றுபவனை, ஜோதி மயமானவனை, நற்பெயர் கொண்டு திருநடனம் புரியும் எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

சர்மாம்பராய சவ பஸ்ம விலேபனாய
பாலேக்ஷனாய மணி குண்டல மண்டிதாய
மஞ்சீர பாத யுகலாய ஜடா தராய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

கட்புலனாகாத மறைவெளியை உடுத்தியிருப்பவனை (மிகவும் சூட்சுமமானவனை), உடல் முழுவதும் சுடலைப் பொடி பூசியிருப்பவனை, நுதல் விழியானை, காதில் அழகிய மணிகளால் ஆன குண்டலங்களை அணிந்திருப்பவனை, கால்களில் கலகலக்கும் பன்மணிச் சலங்கை அணிந்திருப்பவனை, நீண்ட ஜடாமுடியுடைய எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

பஞ்சா நனாய பனி ராஜ விபூஷணாய
ஹேமாம் ஷுகாய புவன த்ரய மண்டிதாய
ஆனந்த பூமி வரதாய தமோமயாய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

ஐந்து முகத்தவனை, ராஜ சர்ப்பத்தை அணிகலனாகக் கொண்டவனை, மின்னும் பொன்னாலான ஆடையை அணிந்திருப்பவனை, மூவுலகையே அணிமணியாகக் கொண்டவனை, கேட்கும் வரங்களை எல்லாம் அருள்பவனை, ஆனந்தமயமான எம் சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

கௌரி விலாச புவனாய மஹேஷ்வராய
பஞ்சா நனாய சரணாகத கல்பகாய
சர்வாய சர்வ ஜகதாம் அதிபாயா தஸ்மை
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

உமையாளின் அருள் உலகமயமானவனை, எம் மஹேஷ்வரனை, கர்ஜிக்கும் சிங்கம் போன்றவனை, அண்டினோர்க்கு சரணாகதி அளிப்பவனை, கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் போன்றவனை, அனைத்திலும் வியாபித்திருக்கும் சர்வேஸ்வரனை, அனைத்து உலகிற்கும் அதிபதியான எமது சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

பானுப் ப்ரியாய பவ சாகர தாரணாய
காலாந்தகாய கமலாசன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுப லக்ஷண லக்ஷிதாய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

சூரிய தேவனுக்குப் பிரியமானவனை, பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெருமானை, காலனை தகனம் செய்தவனை, தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனை, முக்கண்களோடு அனைத்து சுப லட்சணங்களும் பொருந்திய எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

ராமப் ப்ரியாய ரகு நாத வர ப்ரதாய
நாதப் ப்ரியாய நரகார்னவ தாரணாய
புண்யேஷு புண்ய பரிதாய சுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

ஸ்ரீ ராமனுக்குப் பிரியமானவனை, ரகு குல நாதனுக்கு வரமளித்தவனை, நாதத்தில் உறைபவனை, (பிறவி எனும்) நரகத்தை அழிப்பவனை, புனிதத்திலும் புனிதமானவனை, தேவர்கள் வழிபடும் தேவதேவனை, எம் இறைவனான சிவபெருமானை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

முக்தேஷ்வராய பலதாய கணேஷ்வராய
கீதப்ரியாய வ்ருஷபேஷ்வர வாஹனாய
மாதங்க சர்ம வசனாய மஹேஷ்வராய
தாரித்ரிய துக்க தகனாய நமசிவாய.

முக்தி நல்கும் எம் ஈஷ்வரனை, விநாயகனுக்கு அருள்பவனை, இசைக்கு மயங்குபவனை, ரிஷப வாகனனை, மதம் கொண்ட யானைத் தோலை உரித்து ஆடையாகக் கட்டியவனை, மேலே சொல்லப்பட்ட எல்லா பெயர்களுக்கும் உரித்தான மஹேஷ்வரனை, அனைத்து தரித்திர துக்கங்களையும் நீக்கி அருள வேண்டி நான் வணங்குகிறேன்.

பல ஸ்ருதி (பலன் துதி):

வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம்
சர்வ தாரித்ரிய நாசனம்
சர்வ சம்பத்கரம் ஷீஃக்ரம்
புத்ர பௌத்ராதி வர்தணம்
த்ரிசந்த்யம் யஹ் படே நித்யம்
ச ஹி ஸ்வர்கமவாப்னுயத்.

ரிஷி வசிஷ்டரால் அருளப்பட்ட இந்தத் துதியைப் பாடுபவர்களின் அனைத்து தரித்திரங்களும் நீங்கப் பெறும். சகல செல்வங்களும் விரைவில் வந்து சேரும். மனைவி மக்களோடு இன்ப மயமான வாழ்வு அமையும். தினமும் மூன்று வேளை இந்தத் துதியைப் பாடுபவர்களை சுவர்க்கம் புகுமாறு இறைவன் அருளுவான்.

ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்

ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம் :
கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிநேத்ரம்/
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்து ஸூடம்//

கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேயே ஸம்பு மனோபிராமம்/
நமாமி யாணீ க்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸூ//

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி ஸம்ஸேவ்ய பாதாரவிந்தம்/
நரபதிபத்வ ப்ரதமாஸூ நந்த்ரே
ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி//

ஸமாதி ஸம்பத் ப்ரதமானதேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்/
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதி நாதம்//

கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசரஸ்ய ப்ரபாவதி ஹேதும்/
கராக்ஷிபஸ் ஸூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி//

– இதி ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம் ஸம்பூர்ணம் –

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்:

விஶ்வம்தர்பண த்றுஶ்யமான னகரீ துல்யம் னிஜாம்தர்கதம்
பஶ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதானித்ரயா |
யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மானமே வாத்வயம்
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 1 ||
பீஜஸ்யாம்ததி வாம்குரோ ஜகதிதம் ப்ராங்னர்விகல்பம் புனஃ
மாயாகல்பித தேஶகாலகலனா வைசித்ர்யசித்ரீக்றுதம் |
மாயாவீவ விஜ்றும்பயத்யபி மஹாயோகீவ யஃ ஸ்வேச்சயா
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 2 |

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே
ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |
யஸ்ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 3 ||
நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹாதீப ப்ரபாபாஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரண த்வாரா பஹிஃ ஸ்பம்ததே |
ஜானாமீதி தமேவ பாம்தமனுபாத்யேதத்ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 4 ||

தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விதுஃ
ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதினஃ |
மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 5 ||
ராஹுக்ரஸ்த திவாகரேம்து ஸத்றுஶோ மாயா ஸமாச்சாதனாத்
ஸன்மாத்ரஃ கரணோப ஸம்ஹரணதோ யோ‌உபூத்ஸுஷுப்தஃ புமான் |
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோதஸமயே யஃ ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 6 ||
பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி
வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்தஃ ஸ்புரம்தம் ஸதா |
ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 7 ||
விஶ்வம் பஶ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்பம்ததஃ
ஶிஷ்யசார்யதயா ததைவ பித்று புத்ராத்யாத்மனா பேததஃ |
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமிதஃ
தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 8 ||
பூரம்பாம்ஸ்யனலோ‌உனிலோ‌உம்பர மஹர்னாதோ ஹிமாம்ஶுஃ புமான்
இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
னான்யத்கிம்சன வித்யதே விம்றுஶதாம் யஸ்மாத்பரஸ்மாத்விபோ
தஸ்மை குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 9 ||
ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே
தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |
ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வதஃ
ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் || 10 ||

திருமூலர் திருமந்திரம்

 

திருமூலர் தனது திருமந்திரத்தில் சொல்லியிருப்பதைப் பாருங்கள்

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே

.தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

நமது வாழ்க்கை இலையின் மேல் வாழும் பனித்துளி போன்றது. இரவு ஜனித்தது. விடியலில் சூரியன் ஒளியில் மறைந்தது. இவ்வளவு நிச்சயமில்லாத சுருக்கமான வாழ்க்கையில் எத்தனை திட்டங்கள், நம்பிக்கைகள், கோபம், தாபம், எரிச்சல், பொறாமை, சுயநலம்.விரோதம். இதெல்லாம் விட்டொழிக்க வேண்டியவை. நிரந்தரம் இல்லாததை விட்டு நித்யமானதைத் தேடவேண்டும். நமது வாழ்க்கை எப்படியாம் தெரியுமா?

நேற்று பார்த்தேனே, நன்றாக பேசினானே, அடுத்தவாரம் வீடு வாங்குவதாக சொன்னானே. தண்டு போய்விட்டானா? ”—- என்று சொல்லும் நிலையற்ற வாழ்க்கை. இறந்து போனவனைச் சுற்றி ஏகக் கூட்டம். ஊரே திரண்டு விட்டது. ‘ஓ’ வென்று பேரிரைச்சல். அழுகை, எவ்வளவுநேரம். ஒரு நாள் கூட தாங்காது. அவன் பெற்ற பெயர், பட்டம், எல்லாம் அவன் மரணத்தோடு மறைந்து விட்டதே. அவன் அடைந்த பெயர் இப்போது பிணம். இந்த பெயர் கூட அவனை இடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் வரை தான்.

அவன் இப்போது இல்லை. அவனைத் தீக்கிரையாக்கியாச்சு. வேலை முடிந்தது. எல்லோரும் திரும்பிவிட்டார்கள். வீடு திரும்பினார்கள். குளித்தார்கள், மேற்கொண்டு தங்கள் வழக்கமான வேலையைத் தொடர் ந்தார்கள். இருந்தவன் இறந்த பின் நினைவானான். நினைவும் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. அவனும் அவன் நினைவும் கூட இப்போது இல்லை.

இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கவனித்து எழுதியிருக்கிறார். ஒரு விஷயம் தெரியுமா? திருமூலர் மூவாயிரம் ஆண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு பாட்டு (திருமந்திரம் எழுதினர்) திருமந்திரம் மொத்தம் 3000.!! அதில் இது ஒன்று.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று போட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.
இறைவனுக்கு வேண்டியது என்ன? ஒரே ஒரு பச்சிலையே போதும். ஒரு துளி நீர் போதும்.இது கஷ்டமில்லையே?
எல்லோராலும் செய்ய முடிந்தது பசுவுக்கு ஒரு வாய் கீரைக்கட்டு .
அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சிறந்த தர்மம் சாப்பிடும் முன் ஒரு பிடி சாதம் காக்கைக்கு.
இதற்கு மேலும் சிறந்தது மற்றவர்க்கு ஒரு நல்ல இனிய வார்த்தை. திருமூலர் தனக்கே உரிய வழியில் அழகாக எளிமையாக இதை நான்கு அடியில் விளக்குகிறார்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம் பிறர்க்கு இன்னுரை தானே.
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்றுகோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.

கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுரந்தாகனின் மூன்று வலிமையான கோட்டைகளைஎரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்..அவர் இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும்.
என்று வியக்கிறார் திருமூலர்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே
கடைசியாக ஒன்று.

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே

இது என்ன சொல்கிறது பார்ப்போமா? சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறேன். அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான்.

தாரித்திரிய தஹண ஸ்தோத்திரம்- tharithriya

தாரித்திரிய தஹண (போக)ஸ்தோத்திரம்

விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஓம் நமசிவாய

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்