Day & Respective God நாளும் & தெய்வங்கள்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய்வங்கள்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்குஉகந்த தினமாகும்.
அதே போல் செவ்வாய் என்றால் ஹனுமான் மற்றும் புதன் என்றால் விநாயகர் என கூறிக்கொண்டே போகலாம்.
இவையனைத்தும் சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று விரதமிருந்து தரிசிக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஞாயிறு:
நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை
 ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது.அந்நாளில் காலை
வேளையில்சூரியனுக்கு தண்ணீர் படைத்துகாயத்ரி மந்திரம் படிக்க
 மறந்து விடாதீர்கள்சூரிய தோஷம்இருப்பவர்கள் இந்த நாட்களில்
விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும்.

 

 

திங்கள்:
இந்த நாட்களில் சிவபெருமான் சிவன் கோவில்களில் அதிகளவிலான
கூட்டங்களை காணலாம்காரணம் நீலகண்டனைவிரதமிருந்து வழிபட
அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறதுஅன்றைய தினம்,
சிவபெருமானுக்கு பால்அரிசி மற்றும்சர்க்கரையை படைத்திடுங்கள்.
திங்கட்கிழமை சோமவார என்ற மற்றொரு பெயரும் உண்டு.
திங்கட்கிழமை சிவனுக்கு உகந்ததினங்களுள் ஒன்றாகும்.

 

செவ்வாய்:
குரங்கு கடவுளான ஹனுமாரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து
 வழிபடலாம்பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர்சிவபெருமானின்
அவதாரமாக நம்பப்படுகிறார்இன்றை தினம் துர்க்கை அம்மனுக்கு
மிகவும் உகந்ததாகும்திருமணம் தடைபடுபவர்கள் செவ்வாய்
 கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு
 வந்தால் வாழ்க்கை வளமாகும்.

 

புதன்:
அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர்அவரை
விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறதுஎந்தஒரு
காரியத்தை தொடங்குவதாக இருந்தால் முதலில் விநாயகரை வணங்கி
விட்டுதான் தொடங்கவேண்டும்அப்போது தான் நாம்தொடங்கும்
 காரியம் தடங்கல் இன்றி நல்ல விதமாக நடக்கும்.

 

வியாழன்:
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து
வழிபடுவார்கள்விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மிதேவியை
 வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களைவியாழக்கிழமையில்
 வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறதுஅதே போல்
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி (குரு)விரதமிருந்து வழிபட
உகந்த நாளாகும்இந்த தினங்களில் விரதமிருந்து வழிபாட்டால்
திருமண தடைவேலை இல்லாத பிரச்சனைபோன்ற பிரச்சனைகள் தீரும்.

 

வெள்ளி:
துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை
 விரதமிருந்து வழிபட வேண்டும்இந்த நாளில் இக்கடவுளின்அனைத்து
அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

 

சனி:
சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும்அந்த கிரகத்தை
 ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது.சனிக்கிழமைகளில்
விரதமிருந்து சனி பகவான்பெருமாள்ஆஞ்சநேயர் மற்றும்
காளி தேவியை பக்தர்கள் வணங்கலாம்.

 

Advertisements

ஆதித்ய ஹ்ருதயம்

ஆதித்ய ஹ்ருதயம்

மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம்கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம்
செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும்
ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதே சித்த
அற்புத ஸ்லோகம் இது.

இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த
ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததா லேயேராமபிரான் ராவணனை
எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியைபாராயணம் செய்தால் அத் தொல்லைகள் சூரியனைக் கண்ட
பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும்.ஆயுளை
வளர்க்கும்.ஆபத்துக் காலங்களிலும் எந்த கஷ்ட காலத்திலும்
எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும்இத்துதியை ஜபிக்க, மனம்
புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம் 
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் 
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த
அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட
ராமபி ரானை அணுகிப் பின் வருமாறு கூறினார்.

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா… ராமா… போரில் எந்த
மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல
முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை
உனக்கு நான் உபதேசிக்கிறேன், கேள்.

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை
அளிக்கக்கூடியதும் வெற்றியைத் தரக்கூடியதும்அளவற்ற உடல் வலிமையை
தரக்கூடியதும் உத்தமமான, மங்களகரமுமான ஆதித்ய ஹ்ருதயம் என்ற
ஸ்தோத்திரத்தை நீஅனுதினமும் ஜபிக்க வேண்டும். இந்த ஸ்தோத்திரம்,
சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தைஅளிப்பதாகும்.

ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

எல்லாவகையான மங்களங்களையும் வழங்கக்கூடிய மந்திரங்களுக்கு
மேலான மந்திரம் இது. எல்லா பாவங்களையும்போக்கவல்லது. மனக்கவலை,
உடற்பிணிகளைத் தீர்க்கவல்லது. ஆயுளை விருத்தி செய்யும். எல்லா
மந்திரங்களை விடவும்சிறந்ததான இந்த ஸ்தோத்திரத்தை நீ ஜபிக்க வேண்டும்.

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஒளிமிகுந்த கிரணங்களை உடையவனும் நித்தம் உதிக்கின்றவனும்
தேவர்களாலும் அசுரர்களாலும் துதிக்கப்பட்டவனும்எல்லா
ஐஸ்வர்யங்களையும் கொண்டவனும் ஒளிமிகச் செய்பவனும்
ஈஸ்வரனுமாகிய சூரியனை நீ பூஜை செய்ய வேண்டும்.

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

எல்லா தேவதைகளும் இந்த சூரியனுக்குள் அடக்கம். பிரகாசமாக
உடற்பொலிவு கொண்டவர். தன் கிரணங்களாலேயேஉலகை ரட்சிப்பவர்.
தேவர்கள், அசுரர்கள் மற்றும் இந்த உலகமனைத்தையும் தன்
கிரணங்களால் காப்பாற்றுபவர் இந்தசூரியனே.

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

இவரே பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் சிவனாகவும் முருகனாகவும்
பிரஜாபதியாகவும் மகேந்திரனாகவும்குபேரனாகவும் காலமாகவும்
யமனாகவும் சந்திரனாகவும் வருணனாகவும் விளங்குகிறார்.

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:

இந்த சூரியனே பித்ருக்களாகவும் அஷ்டவசுக்களாகவும் சாத்யர்கள் என்ற
தேவர்களாகவும் அச்விநி தேவர்களாகவும் ஸப்தமருந்துகளாகவும்
மனுவாக வும் வாயுவாகவும் அக்கினியாகவும் பிரஜைகளாகவும்,
பிராணனாகவும் பருவ காலங்களைஉருவாக்குபவராகவும்
ஒளி பரப்புபவராகவும் திகழ்கிறார்.

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:

இந்த சூரியனே அதிதியின் புத்திரன். உலகை உண்டுபண்ணுகிறவர்.
கர்மாக்களைச் செய்யச் செய்பவர். ஆகாயத்தில்சஞ்சரிப்பவர். மழையால்
உலகையே வளமாக்குபவர். ஒளிமிகுந்த கிரணங்களைக் கொண்டவர்.
பொன்னிறமானவர். தங்கமயமான பிரமாண்டத்தை உருவாக்கியவர்.
பகலை சிருஷ்டித்தவர்.

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட

அம்சுமான்

பச்சை குதிரையை வாகனமாகக் கொண்டவர். ஆயிரக்கணக்கான
கிரணங்களை உடையவர். ஸப்த என்னும் பெயருள்ளகுதிரையை உடையவர்.
பிர காசத்துடன் விளங்குபவர். இருளை அழிப்பவர். சுகம் அளிப்பவர்.
உலகையே ஸம்ஹாரம்செய்பவர். உலகம் தோன்றுவதற்கு முன்னாலேயே
உருவானவர்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

தங்கமயமான பிரமாண்டத்துக்குரியவர் இந்த சூரியன். காம, க்ரோத,
லோப குணங்களைப் போக்குபவர். எரிச்சலைக்கொடுப்பவர்.
ஒளி மிகுந்தவர். எல்லோராலும் போற்றப்படுபவர். பகலில் அக்கினியைத்
தன் கர்ப்பத்தில் வைத்திருப்பவர்.அதிதியின் புத்திரன். ஆகாசம்
முழுவதும் வியாபித்தவர். பனியை விலக்குபவர்.

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம:

இவர் ஆகாயத்தை உருவாக்கியவர். இருளைப் போக்குகிறவர். ரிக், யஜுர்,
ஸாம வேதங்களுடையப் பொழிவானஉபநிஷத்துகளால்
கொண்டாடப்படுகி றவர். அதிகமான மழையைக் கொடுப்பவர்.
நல்ல நீர்நிலைகளை உருவாக்குபவர்.தட்சிணாயனத்தில் விந்திய மலை
வழியாக சஞ்சரிப்பவர்.

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

இவர் வெயிலைக் கொடுப்பவர். வட்டமான பிம்பம் உள்ளவர்.
நட்புருவானவர். பொன் நிறமுள்ளவர். நடுப்பகலில்அனைவருக்கும்
தாகத்தை உண்டு பண்ணுகிறவர். அனைத்து சாஸ்திரங்களையும்
உபதேசிப்பவர். உலகத்தை நடத்திச்செல்பவர். தேஜஸ் மிகுந்தவர்.
எல்லோரிடமும் அன்பு கொண்டவர். எல்லோருடைய உற்பத்திக்கும்
காரணமானவர்.

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

அஸ்வினி முதலான நட்சத்திரங்கள், நவகிரகங்கள், பிற ஒளிகள்
எல்லாவற்றிற்கும் அதிபர் சூரியன். உலகத்தைக்காப்பாற்றுகிறவர்.
அக்கினி முதலான ஒளிகளுக்கெல்லாம் மேலாக ஒளிர்பவர். பன்னிரண்டு
உருவங்களாக இருப்பவர்.இத்தகைய மகிமை பொருந்திய சூரிய பகவானே
நமஸ்காரம்

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

கிழக்கு திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம். மேற்கு
திசையிலுள்ள மலைமீதிருப்பவரே நமஸ்காரம்.நட்சத்திரங்களுக்கும்
கிரகங்களுக்கும் அதிபதியே, பகலுக்குத் தலைவனே நமஸ்காரம்.

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

என்றும் ஜெயிப்பவரே, வெற்றியையும் மங்களத்தையும் அளிப்பவரே,
பச்சை குதிரை வாகனரே நமஸ்காரம்.ஆயிரக்கணக்கான கிரணங்களைக்
கொண் டவரே, சூரிய பகவானே நமஸ்காரம்.

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பாவிகளுக்கு பயங்கரமானவரே, சிறந்த வீரரே, விரைந்து செல்பவரே
நமஸ்காரம். தாமரைப் பூவை மலரச் செய்பவரே,உலகிலேயே முதலில்
உண்டா னவரே சூரிய பகவானே, நமஸ்காரம்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

பிரம்மா, பரமசிவன், விஷ்ணு இவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனானவரே,
சூரியனே, ஒளிவடிவானவரே, எல்லா யாகங்களிலும்கொடுக்கப்படும்
ஹவிஸை ஏற்றுக்கொள்பவரே, உக்கிரமான சரீரம் கொண்டவரே, நமஸ்காரம்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

இருளை விலக்குபவரே, பனியை உருக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே,
அளவற்ற ஆற்றல் கொண்டவரே, செய்நன்றியைமறப்பவரை வீழ்த்துபவரே,
நட்சத்திரம் முதலான ஒளிகளுக்கு நாயகனே, நமஸ்காரம்.

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

உருக்கிய தங்கம் போல ஒளிர்பவரே, அக்கினி ஸ்வரூபமானவரே, உலகத்தை
உருவாக்கியவரே, அஞ்ஞானத்தைப்போக்குபவரே, பிரகாசம் மிகுந்த வரே,
உலகத்துக்கு சாட்சியானவரே, நமஸ்காரம்.

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

மகாபிரபுவான இந்த சூரியனே பிரளயத்தை உருவாக்குகிறார். மீண்டும்
உலகத்தை இவரே சிருஷ்டிக்கிறார். இவரேபாதுகாக்கிறார். இவரே
தவிக்கவும் வைக்கிறார். இவரே தன் கிரணங்களால் மழை
பொழிய வைக்கிறார்.

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்

பிற அனைத்து பூதங்களும் உறங்கும்போது, அந்தர்யாமியாக இந்த சூரியன்
விழித்துக்கொண்டிருக்கிறார். இவரே யாகம்வளர்க்கும் அக்கினியாகவும்
அந்த அக்கினி யாகத்தின் பலனாகவும் திகழ்கிறார்.

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

வேதங்களாகவும் யாகங்களாகவும் யாகங்களின் பலனாகவும்
உலகத்திலுள்ள எல்லா செயல்களுக்கும் மூல காரணனாகஇந்த
சூரியனே விளங்குகிறார்.

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:

ராகவா! எந்த ஆபத்து காலத்திலும் சரி, எந்த வகையான கஷ்டம்
நேர்ந்தாலும் சரி, காய்ச்சல் முதலான உடல் நோய்கள்எப்போது
ஏற்பட்டாலும் சரி, காடுகளினூடே பயணம் செய்யும்போது எந்த ஆபத்து
எதிர்ப்பட்டாலும் சரி, எப்போது பயம்தோன்றினாலும் சரி, அப்போது
மேற்கண்ட ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்தால் போதும், எந்தத்
துன்பமும் நெருங்கமுடியாது, ராகவா!

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

ஒருநிலைப்பட்ட மனதுடன், தேவர்களுக்கெல்லாம் தேவனான, உலகத்துக்கே
அதிபதியும் ஆன இந்த சூரியனைவழிபடுவாயாக. இந்த ஸ்தோத்திரத் தை
மூன்று முறை ஜபித்தாயானால், இந்த யுத்தத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய்.

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

மனிதருள் மாணிக்கமே, இந்தக் கணத்திலேயே நீ ராவணனை வென்று
வெற்றிவாகை சூடியவனாகிறாய், என்று சொல்லி,அகத்தியர் ராமனை
ஆசிர்வ தித்து விட்டுச் சென்றார்.

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

அகத்தியர் கூறியதைக் கேட்ட ராமன் அப்போதே தன் சோர்வு முற்றிலும்
நீங்கியவனானான். மிகுந்த சந்தோஷத்துடன், புதுஉற்சாகத்துடன்
மேற்க ண்ட ஸ்லோகங்களை ஜபிக்கத் தொடங்கினான்.

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

மூன்று முறை நீரெடுத்து ஆசமனம் செய்து, பரிசுத்தனாகி, சூரியனைப்
பார்த்து இந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, புது பலமும்,புதுப்பிக்கப்பட்ட
தன் னம்பிக்கையுடனும் ராமன் தன் வில்லை எடுத்துக்கொண்டார்.

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்

மகா வீரனான ராமன், வில்லேந்தியவராய் சூரியனை நோக்கி ஜபம் செய்து
பரமானந்தத்தை அடைந்தார். திடமானமனோபலத்துடன் ராவணனுக்கு
எதிரான போருக்குத் தயாரானார். அவனை வதைக்க வேண்டும் என்ற
எண்ணத்தைமனத்திண்மையாகக் கொண்டார்.

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி

அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து
உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்

 

 

அருணகிரியார் பாடல்

அருணகிரிநாதர், போட்டிக்காகப் பாடவேண்டி இருந்ததால், கடினமான தமிழ் நடையைக் கொண்ட ‘கந்தர் அந்தாதி’ எனும் நூலை இயற்றத் துவங்கினார்.வில்லிபுத்தூராரும் உடனுக்குடன் உரை கூறலானார் .53 செய்யுட்கள் இவ்வாறு நிறைவுற்றபின் மேலும் எப்படிப் பாடினால் அவரை மடக்கலாம் என்று அருணகிரியார் முருகனை எண்ணித் துதித்து நின்ற போது, ‘த’கர வர்க்க எழுத்துக்களை மட்டுமே வைத்து அடுத்த செய்யுளைப் பாடுமாறு முருகன் எடுத்துக் கொடுத்தான்.அந்தச் செய்யுள் பின்வருமாறு:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

உயிர் போகும் காலத்தில், முருகன் அடியிணை பெறும் கருணையைத் தரக்கேட்டு அருணகிரியார் பாடிய மேற்குறிப்பிட்ட 54ஆம் பாடலுக்கு உரை கூற முடியாது தவித்தார் வில்லிபுத்தூரார்! தம் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டதும், அருணை முநிவர் தாமே அப்பாடலுக்கு உரை செய்தார்.அத்துடன் மொத்தம் நூறு பாடல்களைப் பாடி நூலை நிறைவு செய்தார்.ஆனால் வில்லிபுத்தூராரின் காதை அறுக்க ஒப்புக்கொள்ளவில்லை நம் கருணை முநிவர். ‘.இனியும் இது போன்ற இழிவுச் செயல்களில் ஈடுபடக்கூடாது.’ என்று அறிவுரை கூறியதோடு அவர் கையிலிருந்த குறடாவைப் பிடுங்கி வீசி எறிந்தார் என்பது வரலாறு.

கந்தர் அந்தாதிப் பாடல்கள் அனைத்துமே, சி,சீ,செ,சே,த,தீ,தெ,தே எனும் எட்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டு துவங்குகின்றன. 27 பாடல்களில் திருச்செந்தூரைப் பற்றிய குறிப்புகள் வருவதால், செந்தூரில் இது பாடப்பட்டிருக்கலாம் என்பதும், திருவண்ணாமலைக் கோவிலிலுள்ள யானை திறை கொண்ட விநாயகரையும், உண்ணாமுலை அம்மையையும் காப்புச் செய்யுட்களில் துதித்துள்ளபடியால் இது ஒரு வேளை திருவண்ணாமலையில் பாடப்பட்டிருக்கலாம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

திதத்த தத்தித்த திதி தாதை தாத – திதத்த தத்தித்த எனும் தாள வரிசைகளைத் தனது நடனம் மூலம் நிலைபெறச் செய்யும் உனது தந்தையாம் பரமசிவனும்

தாத – மறைகிழவோனாகிய பிரமனும்

துத்தி தத்தி தா தித தத்து அத்தி – புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று ஆனால் அலைகள் வீசுகின்ற திருப்பாற்கடலைத் தனது வாசஸ்தலமாகக் கொண்டு

ததி தித்தித்ததே து – ஆயர்பாடியில், தயிர் மிக இனிப்பாக உள்ளதே என்றுகூறி அதை மிகவும் வாரி உண்ட திருமாலும்

துதித்து இதத்து ஆதி – அதை மிகவும் வாரி உண்ட திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியான மூலப்பொருளே!

தத்தத்து அத்தி தத்தை தாத – தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவசேனையின் தாசனே!

திதே துதை – பல தீமைகள் நிறைந்ததும்

தாது – ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்

அதத்து உதி – மரணம்-பிறப்பு இவற்றோடு கூடியதும்

தத்து அத்து – ஆபத்துக்கள் நிறைந்ததுமாகிய

அத்தி தித்தி – எலும்பை மூடி இருக்கும் தோல்பை ஆகிய இந்த உடம்பு

தீ தீ – அக்னியால் தகிக்கப்படும்

திதி – அந்த அந்திம நாளில்

துதிதீ – இவ்வளவு நாட்களாக உன்னைத் துதித்து வந்த என் புத்தி

தொத்ததே – உன்னுடன் ஐக்கியமாகி விட வேண்டும்.

இந்த தெய்வீக கந்தர் அந்தாதி செய்யுட்களை பதப்பிரிவுடனும் பொருட்செறிவுடனும் இந்த இணைய.
.

Miracle water of Vaitheeswaran koil tank water

Vaitheeswaran koil, the famous temple, is situated in Nagapattinam District, Tamilnadu. Lord Shiva is the primary deity here in the name Vaitheeswaran. The water in the tank of this temple is considered holy and the prasadham is considered a medicine. People who have health ailments visit this temple to get cured.

There is a separate shrine for lord Parvathi (Thaiyal Nayagi) and lord Muruga (Selvamuthukumaraswamy).

There are many interesting legends which praise the healing power of the deities and the holy water of the Sithamirtha tank in the temple.

Muthuswamy Dikshitar – One among the musical trinity of carnatic music was losing his eyesight. He prayed Lord Muruga wholeheartedly to help him cure his critical condition. Lord Muruga appeared in his dream as Selvamuthukumaraswamy, asked him to bathe in the Sithamirtha tank of Vaitheeswaran koil and visit his shrine.

Muthuswamy Dikshitar followed the instructions and got his eyesight back. He dedicated a song to Lord Muruga praising his kindness towards his devotees.

Delhi Nawab’s military head was suffering from a severe stomach pain. No medicine was able to cure it. He visited Vaitheeswaran koil and after worshipping in the shrine, his pain got cured. He gifted several invaluable ornaments for the deities of the temple. He started a trust and special poojas are done till date under the trust

சித்தர்கள்  வழிபடும் லிங்கங்கள்

சித்தர்கள்  வழிபடும் லிங்கங்கள்

 1. பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்
 2. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்
 3. சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்
 4. ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்
 5. சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்
 6. ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்
 7. வருணன் ஸ்படிக லிங்கம்
 8. சித்தர்கள் மானச லிங்கம்
 9. புதன் சங்கு லிங்கம்
 10. கணேசர் கோதுமை லிங்கம்
 11. கருடர் அன்ன லிங்கம்
 12. அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்
 13. காமதேவர் வெல்லத்திலான லிங்கம்
 14. விபீஷணன் குப்பையிலிருக்கு� �் மண்ணிலான லிங்கம்
 15. போகர் மரகத லிங்கம்
 16. இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்
 17. ராகு பெருங்காயத்திலான லிங்கம்
 18. நாரதர் ஆகாச லிங்கம்
 19. செவ்வாய் வெண்னையிலான லிங்கம்
 20. நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்
 21. பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்
 22. ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்
 23. டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்
 24. மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்
 25. பரசுராமர் சோளத்திலான லிங்கம்
 26. பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்
 27. பறவைகள் ஆகாச லிங்கம்
 28. வாசுகி விஷ லிங்கம்
 29. கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்
 30. குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

பழமொழி

சாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

தெரிஞ்சிக்கிறது ரொம்ப சிம்பிள்! இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள் உண்மைதானா என்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம் நீக்கமற நிறைத்திருக்கும்.

இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழியுள்ளதாமே.. எப்படி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் சிம்பிள்தாங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.

Sundarar scolding Shiva Song

 

சுந்தரர்தி ட்டி பாட வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தேன்!

நால்வர் பெருமக்களுள் ஒருவரான சுந்தரர் ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி வந்தார். ஒருமுறை அவிநாசி செல்லும் வழியில், பரிசாக பெற்ற பொன், பொருளுடன், அவிநாசி ரோட்டில் தற்போதும் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில், இரவு தங்கினார்.

திருமுருகன்பூண்டியில் தாம் கோவில் கொண்டுள்ளதே தெரியாமல் சுந்தரன் உள்ளானே என எண்ணிய சிவன், திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். வேடன் உருவம் பூண்டு, பூத கணங்களுடன் சென்று பொருட்களை திருடியதோடு, வழி நெடுகிலும் வீசி விட்டு வந்தார்.

காலையில் எழுந்து பார்த்த சுந்தரமூர்த்தி நாயனார் அதிர்ச்சியடைந்து, கூப்பிடு பிள்ளையார் கோயிலில் உள்ள விநாயகரிடம் கேட்டுள்ளார். தந்தையை மீறி பேச முடியாமல், அவரும் மவுனமானார்.

வழியெல்லாம் பொன், பொருள் கிடப்பதை பார்த்த நாயனார், அங்கு சிவன் கோயில் இருப்பதை பார்த்து, உனது எல்லையில் எனது பொருள் திருடு போவதா? “எந்துற்கு எம்பிரான் நீரே என சிவனை திட்டி, பத்து பாடல் பாடியுள்ளார்.

பிறகு காட்சியளித்த சிவன், நீர் திட்டி பாட வேண்டும் என்பதற்காகவே, இதனை செய்தேன் என கூறி, இரண்டு பங்கு பொருள் வழங்கி, அனுப்பி வைத்துள்ளார்.

இக்கதையை விளக்கும் வகையில், கோவிலுக்கு நுழைவதற்கு முன், சிவன் வேடனாக, வில், கல்லுடன் நிற்கும் சிற்பமும், கோபத்துடன் சிவனை எதிர்த்து சுந்தர மூர்த்தி நாயனார் நிற்பது போலவும், சாந்த முகத்துடன், சிரித்தபடியே நிற்பது போலவும் சிலைகள் உள்ளன. இன்றும், சிவன் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோவிலில் உள்ளது