என்ன புண்ணியம் செய்தேனோ

அழும்தொறும் அணைக்கும் அன்னை – அறிவிலாது ஓடி
விழும்தொறும் எடுக்கும் அப்பன்
விளையாடும் போது தோழன்
தொழும்தொறும் காக்கும் தெய்வம்
சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை
இப்படி உலவும் என் குருநாதன் வாழி வாழி

என்ன புண்ணியம் செய்தேனோ – சத்குருநாதா
எத்தனை தவம் செய்தேனோ – நின் அருள் பெறவே

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும்
உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)

வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
படர்முல்லை கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போல
தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு
தேவா தேவா சத்குரு நின் அருள் பெறவே (என்ன)

Advertisements