இரண்டு கருவறை – இரு மூலவர்

ஒரு கோயிலில் ஒரு கருவறையைத்தான் பார்த்திருப்போம். அதிலும் ஒரு மூலவரைத்தான் தரிசித்திருப்போம். ஆனால், ஒரே கோயிலில் இரண்டு கருவறைகளையும், அவ்விரண்டிலும் இரு மூலவர்களை, அதுவும் அம்பாள் சமேதராக தரிசிக்கும் திருத்தலம் ஓசூருக்கு அருகே உள்ள அத்திமுகம் திருத்தலத்தில். காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண் டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் மற்றொரு கருவறையிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சிவலிங்கத் திருமேனி மீது உருவங்கள் பொறிக்கப் படுவது வெகு அபூர்வம். இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் திருமேனி மீது யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது

இதன் காரணம்…

விருத்தாசுரன் எனும் அசுரன், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருந்திய தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர்.

இந்திரன் தமது வாகனமான ஐராவத யானை மீதேறிச் சென்று விருத்தாசுரனுடன் போரிட்டு அவனை வதைத்தான். இதனால் இந்திரனுக்கும் ஐராவதத்துக்கும் பிரம்ம ஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. செவதறியது திகைத்த அவ்வேளையில், ‘அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்’ என்று அசரீரி வாக்கு கேட்டது. அதன் படியே அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, இருவரும் தோஷம் நீங்கப் பெற்றனர். ‘ஹஸ்தி’ என்றால் யானை எனப்பொருள். இந்திரனோடு அவனது யானை ஐராவதமும் தோஷ நிவர்த்தி பெற்றதால் இத்தலம், ‘ஹஸ்திமுகம்’ என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அத்திமுகம் என வழங்கலாயிற்று. இத்தலத்தில் ஐராவதம் சிவ பெருமானை வழிபட்டதால் அந்த யானையின் முகம் சிவ லிங்கத்தின் மீது அமையப்பெற்றுள்ளது தனிச் சிறப்பு.

இக்கோயிலில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி, தம்மை வழிபடுவோரின் அகங்காரத்தை அழித்து ஞானத்தை வழங்குவதால் இப்பெருமான், ‘சம்ஹார தட்சிணாமூர்த்தி’ என அழைக்கப்படுகிறார். வெளிப் பிராகாரத்தில் வடக்கு நோக்கி விநாயகப்பெருமான் அட்சர மாலை அணிந்து அருள்பாலிக்கிறார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியத்துக்காகவும் பக்தர்கள் பெருமளவில் இங்கு வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் சுவாமி அம்பாளுக்கு அபிஷேம் செதும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் வாரத்தில் சூரியன் தன் பொன்னொளிக் கதிர் களால் இறைவனை பூஜிக்கிறார். ஆதியில் இப்பூஜைக் காகவே இறைவன் முன்பு உள்ள நந்தி சற்று விலகி யிருப்பதாகத் தல புராணம் கூறுகிறது. நவக்கிரக தலை வன் சூரியன், சிவபெருமானை இத்தலத்தில் பூஜிப்ப தால், மற்ற கிரகங்கள் அமைதி காத்து, அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. தினசரி பூஜைகளோடு, மகாசிவராத்திரி, திரு வாதிரை மற்றும் விசேஷ தினங்களில் அம்பாள் பெரு மானுக்கு சிறப்பு வழிபாடுகள் செயப்படுகின்றன. செல்லும் வழி: ஓசூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உண்டு. தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.

Amazing Facts about hindu temples

★சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

★திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

★முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

★திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

★திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

★தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

★காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

★சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

★திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

★குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

★ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

★திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

★வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

★திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

★சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

★அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

★இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,மகான்களின்
ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்பெறுகிறார்கள்.