பிரதோஷம்

பிரதோஷம்

 

பிரதோஷம் என்றால் என்ன ?

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறைவளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம்சனிப் பிரதோஷம்என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால்மஹாப் பிரதோஷம்என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?


பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்;


ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:

செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:

ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

 

Advertisements

ஈசன் உபதேசம்

ஈசன் உபதேசம்…
1, ஓமாம்புலியூர் –
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர் –
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம்
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர்
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம்
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர்
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம்
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம்
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள்
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர்
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர்
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம்
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம்
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம்
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர்
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர்
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர்
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்

தாரித்திரிய தஹண ஸ்தோத்திரம்- tharithriya

தாரித்திரிய தஹண (போக)ஸ்தோத்திரம்

விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஓம் நமசிவாய

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்

இடது பதம் தூக்கி-idathu padam thooki

இடது பதம் தூக்கி ஆடும்
நடராஜன் அடி பணிவையே நெஞ்சே

படவரவு ஆட புலி அதள் ஆட
பக்தர்கள் ஜய ஜய எனவே புலி பதஞ்தலி கண் குளிர
தில்லையிலே (இடது)

திருவடிச் சிலம்புகள் கலீர் கலீர் என
திருமுடி இளமதியொளி பளீர் பளீர் என
திகுதிமிதகுதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே புன்னகையொடு (இடது)

எப்படி பாடினரோ – eppadi padinaro lyrics

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே
(எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படி பாடினரோ)

சிவ புஜங்கம் – Shiva bhujangam

சிவ புஜங்கம்
1.கலத்தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலச்சாருசுண்டம் ஜகத்ராண சௌண்டம்!
கன்த்தந்த காண்டம் விபத்பங்க சண்டம்
சிவப்ரேம பிண்டம் பஜே வக்ரதுண்டம்!!

2.அநாத்யந்த மாத்யம் பரம் த்தவமார்தம்
சிதாகாரமேகம் துரீயம் த்வமேயம்!
ஹரிப்ரஹ்மம்ருக்யம் பரப்ரஹ்மரூபம்
மநோவாகதீதம் மஹ:சைவமீடே!!

3.ஸ்வசக்த்யாதிசக்த்யந்த ஸிம்ஹாஸநஸ்தம்
மநோஹாரி ஸ்ர்வாங்க ரத்னோரு பூஷம்!
ஜடாஹீந்து கங்காஸ்திசம்யாக மௌலீம்
பராசக்தி மித்ரம் நும்:பஞ்சவர்த்ரம்!!

4.சிவேசாஸ தத்பூருஷாகோர வாமா
திபி:பஞ்சபிர்ஹ்ருந்முகை:ஷட்பிரங்கை:
அனௌபம்ய ஷட்த்ரிம்சதம் தத்வவித்யா
மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோவா!!

5. ப்ரவால ப்ரவாஹ ப்ரபாசோணமர்தம்
மருத்வன் மணி ஸ்ரீமஹ:ச்யாமமர்தம்!
குணஸ்யூதமேதத் வபு:சேவ மந்த
ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்தி ஹேதோ: !!

6. ஸ்வஸேவாஸமாயாத தேவாஸுரேந்த்ரா
நமந்மௌலி மந்தாரமாலா பிஷக்தம்!
நமஸ்யாமி சம்போ!பதாம்போருஹம் தே
பவாம்போதி போதம் பவானீ விபாவ்யம்!!

7.ஜகந்நாத மந்நாத கௌரீஸநாத
ப்ரபன்னானுகம்பிந் விபந்நார்திஹாரிந்!
மஹ:ஸ்தோம மூர்த்தே ஸமஸ்தைகபந்தோ!
நமஸ்தே நமஸ்தே புனஸ்தே நமோஸ்து II

8.விரூபாக்ஷ!ஸிச்வேச!விச்வாதிதேவ!
த்ரயீமூல சம்போ சிவத்ர்யம்பக த்வம்!
ப்ரஸீத!ஸ்மர, த்ராஹி பச்யாவமுக்த்யை
க்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் II

9. மஹாதேவ!தேவேச!தேவாதிதேவ!
ஸ்மராரே!புராரே!யமாரே!ஹரேதி!
ப்ருவாண:ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்த
ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத II

10. த்வதந்ய:சரண்ய:ப்ரபன்னஸ்ய நேதி
ப்ரஸீத ஸ்மரந்நேவ ஹந்யாஸ்து தைந்யம் !
நசேத் தே பவேத் பக்தவாத்ஸல்யஹாநி:
ததோ மே தயாலோ ஸதா ஸந்நிதேஹி II

11. அயம் தாநகலஸ்த்வஹம் தாநபாத்ரம்
பவாநேவ தாதா;த்வதந்யம் நயாசே!
பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்
க்ருபாசீல சம்போ!க்ரிதார் தோஸ்மி தம்மாத்மிமி

12. பசும் வேத்ஸி சேந்மாம், தமேவாதிரூட:
கலங்கீதி வா மூர்த்னி தத்ஸேதமேவமி
த்விஜிஹ்வ:புவ:ஸோபிதே கண்டபூஷா
த்வதங்கீக்ருதா:சர்வ!ஸர்வேsபிதந்யா: II

13. ந சக்நோமி பரத்ரோஹலேசம்
கதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரிச!
ததாஹி ப்ரஸந்நோஸி கஸ்யாபி காந்தா
ஸுத் த்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோவா II

14. ஸ்துதிம் த்யானமர்ச்சாம் யதாவத்விதாதும்
பஜன்அப்யஜானன் மஹேசாவலம்பே !
த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ:
யமப்ராண நிர்வாபணம் த்வத்பதாப்ஜம் II

15. சிரோத்ருஷ்டி – ஹ்ருத்ரோக – சூலப்ரமேஹ-
ஜ்வரார்சோ – ஜரா – யக்ஷ்ம – ஹிக்கா – விஷார்த்தான்
த்வமாத்யோ பிஷக், பேஷஜம் பஸ்ம சம்போ !
த்வமுல்லாகயாஸ்மான் வபுர்லாகவாய !!

16. த்ரித்ரோsஸ்மி, அபத்ரோsஸ்மி, பக்னோஸ்மி தூயே
விஷண்ணோsஸ்மி, ஸந்நோsஸ்மி, கின்னோsஸ்மி சாஹம் I
பவான் ப்ராணிநாம் அந்தராத்மாஸி சம்போ
மமாதிம் நவேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் II

17. த்வதக்ஷ்ணோ:கடாக்ஷ:பதேத் த்ர்யக்ஷபதேத் த்ர்யக்ஷ
யத்ர க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ :ஸ்வயமா தம் வ்ருணாதே!
கிரீடஸ்புச்சாமரச்சத்ரமாலா-கலாசீ-
கஜ-க்ஷளம-பூஷா-விசேஷை: II

18. பவான்யை பவாயாபி மாத்ரேச பித்ரே
ம்ருடான்யை ம்ருடாயாப்யகக்ன்யை மகக்னே I
சிவாங்க்யை சிவாங்காய குர்ம:சிவாயை
சிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய II

19. பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா
ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யாநுகம் மாம் I
சிவாத்மானுபாவஸ்துதாவக்ஷமோsஹம்
ஸ்வசக்த்யா க்ருதம் மேsபராதம் க்ஷமஸ்வமிமி

20. யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத் கால வாஹ-
த்விஷத் கண்ட – கண்டா கணாத்கார நாத:
வ்ருஷாதீச மாருஹ்ய தேவெளபவாஹ்யம்
ததா வத்ஸ மாபைரிதி ப்ரீணயத்வம் II

21. யதா தாருணாபாஷணா பீஷணா மே
பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதா:
ததா மன்மனஸ்த்வத்பமா ம்போருஹஸ்தம்
கதம் நிஸ்சலம் ஸ்யாத் நமஸ்தேsஸ்து சம்போ II

22. யதா துர்நிவார வசதோணுஹம் சயாநோ
லுடன், நி:ச்வஸன் நி:ஸ்ருதாவ்யக்த வாணி:
ததா ஜஹ்னு கன்யா ஜலாலங்க்ருதம் தே
ஜடா மண்டலம் மன்மனோ மந்திரம்ஸ்யாத் II

23. யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாசே
ருதந்த்யஸ்த ஹா கீத்ருசீயம் தசேதி I
ததா தேவதேவேச கௌரீச சம்போ!
புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம்மிமி

24. யதா பச்யதாம் மாமஸெள வேத்திநாஸ்மா
நயம் ச்வாஸ ஏவேதி வாசோ பவேயு:
ததா பூதிபூஷம் புஜங்காவநத்தம்
புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம் II

25. யதா யாதநாதேஹஸந்தேஹ வாஹீ
பவேதாத்ம தேஹே ந மோஹோ மஹான் மேமி
ததா காச-சீதாம்சூ ஸங்காசமீச !
ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி II

26. யதாபாரமச்சாய மஸ்தானமத்பி:
ஜனைர்வா விஹீனம் கமிஷ்யாமி மார்கம் I
ததா தம் நிருந்தன் க்ருதாந்தஸ்ய மார்கம்
மஹாதேவ!மஹ்யம் மனோஜ்ஞம் ப்ரயச்ச! II

27. யதா ரௌவாதி ஸ்மரன்னேவ பீத்யா
வ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம் I
ததா மாமஹோ நாத!கஸ்தாரயிஷ்ய-
த்யநாதம் பராதீனமர்த்தேந்து மௌலே!மிமி

28. யதா ச்வேத பக்ராயதாலங்க்ய சக்தே
க்ருதாந்தாத் பயம் பக்தவாத்ஸல்ய பாவாத் I
ததா பாஹிமாம் பார்வதீவல்லபான்யம்
ந பச்யாமி பாதார மேதாத்ருசம்மே II

29.இதானீமிதானீம் ம்ருதிர்மே பவித்ரீ
த்யஹோ ஸந்ததம் சிந்தயா பீடிதோsஸ்மி I
கதம் நாம மா பூத் ம்ருதௌ பீதிரேஷா
நமஸ்தே கதீனாம் கதே நீலகண்ட! II

30.அமர்யாத மேவாஹ மாபால வ்ருத்தம்
ஹரந்தம் க்ருதாந்தம் ஸமீக்ஷ்யாஸ்தி பீத:
ம்ருதௌ தாவகாங்க்ரயப்ஜ திவ்யப்ரஸாதாத்
பவானீபதே நிர்லயோsஹம் பவானி II

31.ஜராஜன்ம கர்பாதிவாஸாதிது:கா
நயஸஹ்யாநி ஜஹ்யாம் ஜகந்நாததேவ! I
பவந்தம் விநாமே கதிர்நைவ சம்போ !
தயாலோ ந ஜாகர்த்திகிம்வா தயா தே II

32. சிவாயேதி சப்தோ நம:பூர்வ ஏஷ
ஸ்மரன் முக்திக்ருத் ம்ருத்யுஹா தத்வவாசீமி
மஹேசாந மா கான்மனஸ்தோ வசஸ்த:
ஸதா மஹ்யமேதத் ப்ரதானம் ப்ரயச்ச II

33. த்வமப்யம்ப!மாம் பச்ய் சீதாம்சூமௌலி-
ப்ரியே!பேஷஜம் த்வம் பவவ்யாதிசாந்தௌ
பஹ§க்லேச பாஜம் பதாம்போஜபோதே
பவாப்தௌ நிமக்னம் நயஸ்வாத்ய பாரம் II

34. அனுத்யல்லலாடாக்ஷி வஹ்நிப்ரரோஹை:
அவாமஸ்புரத் சாருவாமேரு சோபை: I
அனங்கப்ரமத் போகிபூஷா விசேஷை:
அசந்த்ரார்த்த சூடை ரலம்தைவதைர் ந: II

35. அகண்டே கலங்கா தனங்கே புஜங்காத்
அபாணௌ கபாலா தபாலேநலாக்ஷ£த் I
அமௌலௌ சசாங்காதவாமே கலத்ராத்
அஹம் தேவ மன்யம் நமன்யே நமன்யே II

36. மஹாதேவ!சம்போ கிரீச!த்ரிசூலின்
த்வயீதம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத் !
சிவாதன்யதா தைவதம் நாபிஜாதே
சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம் II

37. யதோsஜாயதேதம் ப்ரபஞ்சம் விசித்ரம்
ஸ்திதிம் யாதி யஸ்மின் யதேகாந்தமந்தே I
ஸகர்மாதிஹீன:ஸ்வயம்ஜ்யோதிராத்மா
சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம், சிவோsஹம்மிமி

38. கிரீடே நிசேசோ லலாடே ஹ§தாசோ
புஜே போகிராஜோ கலே காலிமா ச!
தநௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்
ந ஜானே ந ஜானே நஜானே ந ஜானே II

39. அநேந ஸ்தவேநாதராதம்பிகேசம்
பராம் பக்திமாஸாத்ய யம் யே நமந்திமி
ம்ருதௌ நிர்பயாஸ்தே ஜனாஸ்தம் பஜந்தே
ஹ்ருதம்போஜமத்யே ஸதாஸீநமீசம் !!

40. பஜங்கப்ரியாகல்ப சம்போ மயைவம்
புஜங்கப்ரயாதேந வ்ருத்தேந த்லுப்தம் !
நர:ஸ்தோரமேதத் படித்வோருபக்த்யா
ஸுபுத்ராயுராரோக்ய மைச்வர்யமேதிமிமி

 சிவ புஜங்க ஸ்தோத்ரம் முற்றிற்று

சிவ ஸ்தோத்திரம்- Shiva slokas

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழ பாடி உள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!

==================================top

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

==================================top
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

==================================top
காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதநான் கினும் மெய்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயமே
==================================top

வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே

==================================top

சிவனோடொக்குந் தெய்வந் தேடினுமில்லை
அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

==================================top

அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே

==================================top

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

==================================top

நல்லவை பெருகவேண்டும் நாடெல்லாம் வாழவேண்டும்
அல்லவை ஒழியவேண்டும் அனைத்துயிர் வாழவேண்டும்
பொல்லவைக் கலியும் நீங்கிப் புதுயுகம் பூக்கவேண்டும்
செல்வமிக் கோங்கும் அண்ணா மலைவளர் தேவதேவ!

==================================top

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
==================================top

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே
==================================top

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
==================================top

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

==================================top