எட்டிரண்டின் – Tamil poem siddar song

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக
எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.

==

எட்டு ரண்டுமறி யாத என்செவியி
லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசையோர்கள் பொன்றஅயில் விடுவோனே

==
எட்டு இரண்டும் அறியாத என் செவியில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே

எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மேல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே

“எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை”

என்கிறார் இடைக்காட்டு சித்தர்.
==
எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்

உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து
என்கிறார் கடுவெளி சித்தர்.
==

எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!”
என்கிறார் திருமூலர்

==

ஐயப்பன் மணிமாலை- Ayyappa manimalai

நவக்கிரஹ சாந்தி தரும் ஐயப்பன் மணிமாலை 
 (அகத்திய முனிவர்  அருளிச் செய்தது)  
நவக்ரஹ நாயகரும் நல்லவராய் என்முன்
அவக்கவலை வாரா தருளத்-  தவக்கனலாம்
மன்னவன் ஐயப்பன் மணிமாலை நானுரைக்க
முன்னவனே காத்தல் முறை.
==
ஓதித் தலமெலாம் சுற்றினேன் ஆயினும் உண்மை ஒளி
போதித்த நின்னைப் புகலடைந்தேன் செய்தபுண்ணியத்தால்
சாதித்தவர்க் கருள் ஐயப்பனே நீ தரும் வரத்தால்
ஆதித்த தேவன் எனக்கின்பமெல்லாம் அருள்க நன்றே!
==
மந்திரம் உன் திரு நாமம் வாழ்விற்கு வழித்துணையாய்
முந்துறல் நீயென்று கண்டுகொண்டேன் நல்முடிசுமந்து
வந்தடைவோர்க்கருள் ஐயப்பனே நின் வரபலத்தால்
சந்திரதேவன் எனக்கின்பமெல்லாம்  தந்திலங்குகவே! 
==
கங்காதரனும் கனகாம்பரனும் கலந்து யோக
சிங்காததனமேறும் தேவாதி தேவா சிவகுமரா
வெங்கானகத்துவாழ் ஐயப்பனே நின் தண்ணருளால்
அங்காரகன் எனக்கின்பங்கள் எல்லாம் அருள்க நன்றே!
==
விதவித மான வியாகுல மெல்லாம்  விலக நீயே
சதமென நம்பி என் அப்பா சரணம் சரணம் என்றேன்!
மதகஜ மேல்வரும் ஐயப்பனே நின் வரபலத்தால்
புத பகவான் எனக்கின்பங்களெல்லாம் பொழிக நன்றே!
==
இருமூர்த்தியும் ஆதிசக்தியும் ஒன்றாய் இணந்து
ஒருமூர்த்தியாய் வந்த உத்தமனே ! ஞானமுற்றவர்முன்  
வருமூர்த்தியாம் எங்கள் ஐயப்பனே நீ தரும் வரத்தால் 
குருமூர்த்தி இன்பங்கள் எல்லாம் தருக குலமோங்கவே! 
==
விக்கினமின்றி விரதங்கள் காத்து விதி முறைபோல்  
அக்கினி ஞான மலைமேல் வருவோருக்கு அருள்புரியும்
முக்கியனே ஜோதி ஐயப்பனே நின் முன் நிற்பதால்
சுக்கிர மூர்த்தி சுப யோகமெல்லாம் தந்திலங்குகவே!
==
இனி உனையன்றி எனக்கொன்றுமில்லை என் இச்சையெல்லாம்
கனியவைத்தாய் கருணைக்கடலே! ஒருகட்டும் இன்றித்
தனிமையில் என்னுடன் நீ ஓடியாடிய சத்தியத்தால்
சனிபகவான் இடர் இல்லாத இன்பம் தருக நன்றே! 
==
நிராமயமாகி நிரஞ்சனமாகி வெண்ணீலமான
பராபரனே ஞான பாஸ்கரனே நின் பதம் பணிந்தேன்!
சராசர நாதனே , ஐயப்பனே நின் தண்ணருளால்
இராகு எனக்கு இகபோகமெல்லாம் தந்து இலங்குகவே!
==
வேதமும், வேதாந்த வித்தையும் ஞான விளக்கமும் நீ
பூத நாதா தேவ தேவனே! பூரணை புஷ்கலையாம்
மாதருடன் வாழும் ஐயப்பனே நின் வரலத்தால்
கேது தருக நிறைந்த சௌபாக்கியமும் கீர்த்தியுமே! 
==