திருக்கண்ணங்குடி

வஸிஷ்ட மகரிஷிக்குக் கண்ணபிரானிடம் விசேஷ ஈடுபாடு உண்டு. கண்ணனுக்கு மிகவும் பிடித்த பொருளான  வெண்ணெ யாலேயே கிருஷ்ண விக்கிரகம் செய்து, அந்தக் கண்ணனை வழிபட்டு வந்தார் அவர். 

அவரது ஆழ்ந்த  பக்தியின் காரணமாக வெண்ணெயாலான அந்த விக்கிரகம் உருகாமலேயே இருந்தது.

அவரது சீடர்களிடம்,  “எம்பெருமான் எடுக் கும் திருமேனிகள் எப்போதும் மாறுவதே இல்லை. அவனது பெருமைகள், தாமரைக் கண்கள்,  ஞானம், தூய்மை முதலியவை எப்போதும் மாறாது. மாறாத தன்மை கொ ண்டவன் இறைவன்” என்று அடிக்கடி  சொ ல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக உருகாமல் இருக்கும் வெண்ணெய் விக்கிரகத்தைக் காட்டுவார்.

“வெண்ணெய்யால் நான் அமைத்த இந்த விக்கிரகம் கூட உருகாமல், மாறாமல் இரு க்கிறது பாருங்கள்!” என்பார்.

ஒருநாள் வசிஷ்டர் தியானத்தில் ஆழ்ந்தி ருந்தபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒரு வன் அவரது ஆஸ்ரமத்துக்குள்  நுழைந்தா ன். வசிஷ்டரின் வெண்ணெய் கண்ண னை கண்டான். வெண்ணெயை உண்ண வேண்டும் என்று அவனுக்கு  ஆவல் ஏற்ப ட்டதால், அந்த வெண்ணெயாலான விக்கி ரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி எடுத்து வாயில்  போட்டுக் கொண்டான்.

விக்கிரகத்தின் சிறிய பகுதியே மிச்சம் இருந்த நிலையில் தியானத்திலிருந்து கண்விழித்துப்  பார்த்தார் வசிஷ்டர். மீத முள்ள பகுதியையும் விழுங்கிவிட்டு ஆசிர மத்தை விட்டு ஓடினான் அந்தச் சிறுவன். 

வசிஷ்டர்  அவனைத் துரத்திக் கொண்டு சென்றார். அருகிலுள்ள காட்டை நோக்கி அந்தச் சிறுவன் ஓடினான். அங்கே ஒரு மகிழ மரத்தடியில் சில ரிஷிகள் தவம் புரிந்து கொண்டிருந்தார்கள். தங்கள் தவ வலிமையால் ஓடி வரும்  சிறுவன் சாட்சாத் கண்ணபிரான்தான் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். 

துரத்திக் கொண்டு ஓடிவந்த வசிஷ்டர்,  “அவனை விடாதீர்கள்! பிடித்துக் கட்டுங்கள்!” என்றார். அந்த ரிஷிகளும் கண்ணனைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்  போட்டார்கள்.

“ஏனடா என் கண்ணனை விழுங்கினாய்?” என்று கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டார் வசிஷ்டர்.  

“மாறுதல் இல்லாத அந்த விக்கிரகத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி.என் வயிற் றுக்குள் எப்போதும் மாறாமல்  உங்கள் கண்ணன் இருப்பான்!” என்று சொல்லி அவன் புன்னகைத்தபோது, அவன் கண் ணபிரான் என்று வசிஷ்டரும்  உணர்ந்து கொண்டார்.

வசிஷ்டரும் மற்ற ரிஷிகளும், “கண்ணா! இப்போது அந்தவிக்கிரகத்தை நீ விழுங்கி விட்டால் இனி நாங்கள் எப்படி  உன்னைக் கண்கொண்டு தரிசிப்பது?” என்று கேட்டார்கள். 

அடுத்த நொடி, நான்கு திருக்கரங்களோ டும் திவ்ய ஆயுதங்களோடும் கூடிய திவ்ய மங்கள விக்கிரத்தோடு எம்பெருமான் அவருக்குக் காட்சியளித்தான்.

“வசிஷ்டரின்  பக்திக்கு உகந்து வெண் ணெய் வடிவில் உருகாமல் இருந்த நான் உங்கள் அனைவரின் பக்திக்கும் உகந்து, இந்த  தாமோதர நாராயணத் திருக்கோல த்தில் மாறாமல் எப்போதும் இங்கே எழுந்தருளியிருப்பேன். நீங்கள் என்னைத்  தரிசிக்கலாம்!” என்றான் எம்பெருமான். 

அந்தத் திருத்தலம் தான் நாகப்பட்டினத்து க்கு அருகில் உள்ள  ‘திருக்கண்ணங்குடி’. அங்கே ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாமோதர நாராயண பெருமாள் எழுந்தருளியுள்ளா

Leave a comment