சிவ வாக்கியர் பாடல்

சிவ வாக்கியர் பாடல்

மாறுபட்டு மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊருபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே,
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.

 

” தேன் அபிஷேகம் சிவலிங்கத்துக்கு பண்றதை சொல்றார். முட்டாள்களே, வழி தவறி எங்கெங்கோ போய் காட்டுக்குள் தேடி, வண்டுகளின் எச்சில் மூலம் சேகரிக்கப் பட்ட தேனை, வெயிலிலும் மழையிலும் உலர்ந்து நனைந்த சிவலிங்கம் என்ற பழைய கல்லின் மேல் கொட்டி வணங்குகிறீர்களே, புரிந்து கொள்ளுங்கள், தேவர்களுள் உள்ள பிணக்கை தீர்த்தவனும் அடிமுடி காணாத ஜோதியுமான என்னை அறிய முயலுங்கள். நான் கல்லில் மட்டும் இல்லையே.. என்கிறார் சிவன்” .

 

”சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே
கரியதோர் முகத்தைஉற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்க வேண்டுமே

இந்த அஞ்செழுத்து மந்திரம் இருக்கிறதே. ஓம் நமசிவாய: இதன் சக்தி அளவிடமுடியாதது. முதலும் முடிவும் இல்லாதது மட்டுமல்ல அதுவேஎல்லாமுமானது. முப்பத்து முக்கோடி தேவரும் வணங்கும் சிவனை இந்த நாம மந்திரத்தோடு உச்சரித்தால், தோஷம், பாவம், மாயை, துன்பம் சகலமும் விலகும். ஓடிவிடும். கரிய முகத்தோடு கூடிய சிவன் ஞான சிகரம். மோன விளிம்பு. ஏதோ அறியேன் பேதையாக பிதற்றுபவன் சிவ வாக்கியம் என்று தவறாக எதையாவது சொல்லியிருந்தால் க்ஷமிக்க வேண்டும். அவனுக்கே பித்தன், பேயன் சுடலையான் என்று தானே பெயர்…

மற்றுமொரு அசாத்திய பாடல்: சிவ வாக்கியம் என்றாலே இது தான்:

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

உள்ளே ஆழமாக போகவே வேண்டாம். மேலெழுந்தவாரியாக பார்த்தாலே அர்த்தம் புரியும்.
என்னுள்ளே உள்ள அவனை — உள்ளே கிடக்கும் ”கட- வுள்’ என்னிலேயே இருப்பதை மூடன் நான் அறியவில்லை, என்னுள்ளே அவன் இருக்கிறான் என்று எப்போது தெரிந்ததோ, எப்போது என்னால் அவனை உணர முடியுமோ, அதை உணர்ந்து கொண்டேனோ, அவனைப் புரிந்து கொண்டேனோ, ஆஹா, நான் அவனோடு உள்ளே கலந்து ஐக்யமாகி விட்டேன் சார். என்ன சந்தோஷம் ! மனசு பூரா அவன் கிட்டேயே. மனசு அவனை விட்டு வெளியே வரமாட்டேங்குது, சார் ”.

நமது இந்து பாரம்பரியத்தில் சிவ வாக்கியர் ஒரு பெரிய மைல் கல். ஆன்மீக தத்தவங்களை அப்படியே புட்டு புட்டு சுருக்கமாக வைத்து அழகிய தமிழில் அளிப்பவர். அவர் பாடல்களின் சந்தம் திருமூலருடையது மாதிரியே இருக்குமே. ரெண்டுமே ரெண்டு கண்கள். சிவ வாக்கியர் ஒரு சிறந்த சித்தர். அவர் சித்தம் சிவன் போக்குப்படியே தான் இருக்கிறது எனினும் ஆழ்ந்த அத்வைத அநுபூதி நிறைந்தது.

இது எல்லோரும் அறிந்த துணிச்சலான பாடல். படிப்பவர் எடுத்துக்கொள்ளும் பாங்கிற்கு உட்பட்டது. நாத்திகம் அல்ல. உயர்ந்த அத்வைத சாஸ்திரம். அருவத்தை உருவத்தில் (மட்டும்) தேடாதே என்று அறிவுறுத்தும் வகை.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொண மென்று சொல்லு மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?

அர்த்தம் தேவையில்லை. கல்லிலானான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, நிறைய புஷ்பம் சார்த்தி, மொண மொண வென்று ஏதேதோ மந்திரம் எல்லாம் சொல்லுகிறாயே. அது பேசுமா? அதே நேரத்தில் கொஞ்சம் யோசி. உன்னுள்ளே சதா சர்வ காலமும் இருந்து கொண்டு அந்தராத்மா என்று பெயர் சொல்லுகிறாயே, அது இருப்பதை கவனத்தில் வைத்தாயா.? அது பேசுமய்யா , கொள்ளை பேச்சு பேசும்!! . இருப்பதை விட்டு இல்லாததை தேடுகிறாய்.

மனது உண்மையறியாது, உழல்வது எதற்கு சமம் என்று ஒரு அழகிய உதாரணம் வேறு சொல்கிறார் சிவவாக்கியர். கமகம வென்று நெய்மணக்க பாதாம் அல்வா கிண்டுகிறாயே, எவர் சில்வர் கரண்டி உள்ளே சுருண்டு வரும் அல்வாவை கிளருகிறதே. துளியாவது அந்த கரண்டிக்கு ஹல்வாவின் சுவை, அருமை தெரிகிறதா? அதுபோல் தான் மனம் உள்ளே செல்லாத, அவனை அறியாத உன் பூஜை?

கருமாரி அம்மன் பாடல்

கருமாரி அம்மன் பாடல்.

கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்,
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்,
பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும்,
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்,
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்,
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்,
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா,
மக்களுடைய குறைகளையும் தீருமம்மா

நெற்றியிலே குங்குமமே நிறைய வேண்டும்,
நெஞ்சில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்,
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்,
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்,
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்,
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லாமா?
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா?

அன்னைக்கு உபகாரம் செய்வதுண்டோ?
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ?
கண்ணுக்கு இமையின்றி காவலுண்டோ?
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ?
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ?
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ?
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ?
என்றைக்கும் நான் உந்தன் பிள்ளையன்றோ?

அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்,
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்,
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்,
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்,
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்,
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்,
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்,
என்னோடு நீயென்றும் வாழ வேண்டும்

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை,
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை,
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை,
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை,
செம்பவள வாயழகி உன்யெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை,
அம்பளவு விழியாளே உன்னை என்றும்!
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை 

காற்றாகி கனலாகி கடலாகினாய்,
கருவாகி உயிராகி உடலாகினாய்,
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்,
நிலமாகி பயிராகி உணவாகினாய்,
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை.

விநாயகர் வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

51 விநாயகர் வடிவங்களும்
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

ஈசன் உபதேசம்

ஈசன் உபதேசம்…
1, ஓமாம்புலியூர் –
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர் –
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம்
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர்
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம்
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர்
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம்
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம்
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள்
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர்
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர்
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம்
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம்
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம்
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர்
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர்
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர்
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்