சப்த ரிஷி ராமாயணம்-SAPTHA RISHI RAMAYANA

சப்த ரிஷி ராமாயணம்

ஸ்ரீ ராமனைப் பற்றி அநேக ராமாயணங்கள் உள்ளன. ஸ்ரேஷ்டமாக ஒரு ராமாயணம். அது 7 ஸ்லோகங்களாக 7 ரிஷிகளால் பாடப் பெற்றது. அதன் பெயர் சப்தரிஷி ராமாயணம்..

बालकाण्डम् – काश्यपः
जातः श्रीरघुनायको दशरथान्मुन्याश्रयस्ताटकां. हत्वा रक्षितकौशिकक्रतुवरः कृत्वाप्यहल्यां शुभाम् ।
भङ्क्त्वा रुद्रशरासनं जनकजां पाणौ गृहीत्वा ततो जित्वार्द्धाध्वनि भार्गवं पुनरगात्सीतासमेतः पुरीम् ॥ 1

1.காச்யப ரிஷி – பாலகாண்டம்
ஜாதஸ்ரீ ரகு நாயகோ தசரதான், முனியாஸ்ரய தாடகாம், ஹத்வா ரக்ஷித கெளசிக க்ருதுவர: க்ருத்வாப்யஹல்யாம் ஷுபம் I
புங்க்த்வ்வா ருத்ர ஸராஸ ஜனகஜாம் பாணௌ க்ருஹித்வா ததோ ஜித்வார்தாத்வனி பார்கவம் புனரகாத் சீதாசமேத: புரிம் I. 1

காஷ்யப மகரிஷியின் ஸ்லோகம் – பால காண்டம் 1

புத்திர பாக்கியம் வேண்டிய தசரதரின் புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்து ரவி குல திலகமாக ஸ்ரீ ராமர் அவதரித்தார். சகல வித்தைகளையும் முதலில் ராஜரிஷி பின்னர் பிரம்ம ரிஷியாகிய விச்வாமித்ரரிடம் கற்றார். சகல அச்த்ரங்களையும் பிரயோகம் பண்ணுவதற்கு அவரிடம் பெற்றார். முதல் ராக்ஷச வதமாக தாடகையைக் கொன்று முனிவர்களை காப்பாற்றினார். விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்துக்கு ராக்ஷசர்களின் தடங்கல் எதுவும் வராமல் காத்தார். பின்னர் அவர் பாணங்களில் மாண்ட அரக்கர்கள் சுபாகுவும் மாரிச்சனும். பல நூறு வருஷங்கள் தவமிருந்த கல்லாக சமைந்த அகலிகா அவர் பாதம் பட்டது முதல் மீண்டு ரிஷி பத்னியானாள் . விச்வாமித்ரரோடு மிதிலை விஜயம் செய்தார். எவராலும் அசைக்க முடியாத சிவ தனுசுவை நொடியில் எடுத்து நிறுத்தி எல்லோரும் ”எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” பூமாதேவி அம்சமான ஸ்ரீ சீதா தேவியை மணம் புரிந்தார். ஜானகி ராமனாய் அவர்கள் நடக்கையில் வழியில் பரசுராமர் கர்வ பங்கம் நடந்தது. அயோத்தி திரும்பினார்கள் . நலமாக பல்லாண்டு வாழ்ந்தார்.

अयोध्याकाण्डम् अत्रिः
दास्या मन्थरया दयारहितया दुर्भेदिता कैकयी श्रीरामप्रथमाभिषेकसमये माताप्ययाचद्वरौ ।
भर्तारं भरतः प्रशास्तु धरणीं रामो वनं गच्छता- दित्याकर्ण्य स चोत्तरं न हि ददौ दुःखेन मूर्च्छां गतः॥ 2
2. அத்ரி மகரிஷி ஸ்லோகம் – அயோத்யா காண்டம்

தாஸ்யா மந்தரய தயா ரஹிதயா துர்போதிதா கைகயி ஸ்ரீ ராமப்ரதமாபிஷேக சமயே மாதாப்ய யாச த்வரௌ I
பர்த்தாரம் பரத: ப்ரஷாஸ்து தரணீம் ராமோ வனம் கச்சதா: தித்யாகர்ண்ய ஸ சோதரம் ந ஹி ததௌ துக்கேன மூர்ச்சா கத:

ஒரு சேடி , பணியாள், மந்தரை இதமாகப் பேசி கைகேயியின் மனத்தைக் கல்லாக்கி, ராமனுக்கு பட்டாபிஷேக சந்தோஷ சமயத்தில் பழைய நினைவூட்டி தசரன் வாக்களித்த இரு வரங்களை கேட்க வைத்தாள் பரதன் நாடாள, ராமன் காடாள . ஒரு நாளோ மாதமோ வருஷமோ அல்ல, பன்னிரண்டு வருஷங்கள். ராஜாவாக அல்ல, மரவுரி தரித்து ரிஷியாக. தாங்கமுடியாத பேரிடியாக சத்யத்தை நிலைநிறுத்த, கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மயங்கி விழுந்தான் தசரதன்.

3. आरण्यकाण्डम् – भरद्वाजः

श्रीरामः पितृशासनाद्वनमगात् सौमित्रिसीतान्वितो गंगां प्राप्य जटां निबध्य सगुहः सच्चित्रकूटे वसन्।
कृत्वा तत्र पितृक्रियां सभरतो दत्वाऽभयं दण्डके प्राप्यागस्त्यमुनीश्वरं तदुदितं धृत्वा धनुश्चाक्षयम् ॥

3. பாரத்வாஜ மகரிஷி ஸ்லோகம் – ஆரண்ய காண்டம்
ஸ்ரீ ராம: பித்ருசாசனாத் வனமகாத் சௌமித்ரி சீதான்விதோ கங்காம் ப்ராப்ய சதாம் நிபத்யா சகுஹ: சச்சித்ரகூடே வஸன் :
க்ருத்வா தத்ர பித்ருக்ரியாம் சபரதொ தத்வாஅபயம் தண்டகே : ப்ராப்யா அகஸ்திய முனீஸ்வரம் ததுதிதம் த்ருத்வா தனுஸ்சாக்ஷ்யம் :

அப்பா கூட சொல்லவில்லை. அப்பா சொன்னதாக சிற்றன்னை சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு ஸ்ரீ ராமன் சீதா லக்ஷ்மணர்களோடு வனவாசம் சென்றான். கங்கை அடைந்தான். ஜடாமுடி தரித்தான். குஹன் உதவ, சித்ரகூடம் அடைந்தான். பரதன் வந்து தந்தை விஷ்ணுபதம் சேர்ந்தார் என்றறிந்து ஈமக்ரியைகள் செய்தபின் தண்டகாரண்யத்தில் ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தான். அகஸ்தியரை சந்தித்து ஆசி பெற்றான். கோதண்டம் வலுப்பெற்றது. தோளில் அமர்ந்தது.

4 किष्किन्धाकाण्डम्- विश्वामित्रः
गत्वा पञ्चवटीमगस्त्यवचनाद्दत्वाऽभयं मौनिनां छित्वा शूर्पणखास्यकर्णयुगलं त्रातुं समस्तान् मुनीन्।
हत्वा तं च खरं सुवर्णहरिणं भित्वा तथा वालिनं तारारत्नमवैरिराज्यमकरोत्सर्वं च सुग्रीवसात् ॥

4. பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் ஸ்லோகம் – கிஷ்கிந்தா காண்டம்

கதவா பஞ்சவடி அகஸ்த்ய வச்சனா திருத்வா அபயம் மௌநீனாம்;
சித்வா சூற்பனகச்ய கர்ண யுகளம் த்ராதும் சமஸ்தான் முனின் :
ஹத்வா தம் ச கரம் சுவர்ண ஹரிணபித்வா ததா வாலினம்; தாரா ரத்ன மவைரி ராஜ்ய மகரோத் சர்வ ச சுக்ரீவஸாத்:.

அகஸ்தியர் காட்டிய வழியில் பஞ்சவரி அடைந்தார்கள். காட்டில் முனிவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. சூர்பனகையை மூக்கு, காதுகளை வெட்டி பங்கப்படுத்தினர். கர தூஷணர்கள், மாயமானாக வந்த மாரீசன், வாலி அனைவருமே வதம் செய்யப்பட்டனர். சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தா ராஜ்ய பட்டாபிஷேகம் நடத்தி தாரையின் அறிவுரைப்படி ஆள்வாய் என்று ஆசிர்வதித்தார்.

5.सुन्दरकाण्डम् – गौतमः
दूतो दाशरथेः सलीलमुदधिं तीर्त्त्वा हनूमान् महान् दृष्ट्वाऽशोकवने स्थितां जनकजां दत्वांगुलेर्मुद्रिकाम्।
अक्षादीनसुरान्निहत्य महतीं लङ्कां च दग्ध्वा पुनः श्रीरामं च समेत्य देव जननी दृष्टा मयेत्यब्रवीत् ॥
5. கௌதம ரிஷி ஸ்லோகம் – சுந்தர காண்டம்

தூதோ தசரதே: சலில முததிம் தீர்த்வாம் ஹனுமான் மகான் : த்ருஷ்ட்வா அசோகவனே ஸ்திதாம் ஜனகஜாம் தத்வா அங்குலேர் முத்ரிகாம் அக்ஷாதீன அசுறான் நிஹத்ய மஹதீம் லங்காம் ச தக்த்வா புன: ஸ்ரீ ராமம் ச சமேத்ய தேவ ஜனனி த்ருஷ்டா மயேத்ய ப்ரவீத்.:

ராம தூதனாக ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கையில் பிரவேசித்து அசோகவனத்தில் சீதா தேவியைத் தரிசித்தான். முத்ரை கணையாழியை அளித்தான். அசுரர்களையும் ராவணன் புத்திரன் அக்ஷயகுமாரனையும் கொன்றான். தீவுக்கு தீ வைத்தான். ராமனிடம் திரும்பி தாயைக் கண்டேன் என்றான்.
6. युद्धकाण्डम् — जमदग्निः
रामो बद्धपयोनिधिः कपिवरैर्वीरैर्नलाद्यैर्वृतो – लङ्कां प्राप्य सकुंभकर्णतनुजं हत्वा रणे रावणम्।
त्सयाम् न्यस्य विभीषणं पुनरसौ सीतापतिः पुष्पका- रूढः सन् पुरमागतः सभरतः सिंहासनस्थो बभौ ॥

6. ஜமதக்னி ரிஷி ஸ்லோகம் – யுத்த காண்டம்

ராமோ பத பயோ நிதி: கபி வரை வீரைர்ன லாதயைர் வ்ருதோ – லங்காம் ப்ராப்ய ஸ கும்பகர்ண தனுஜம் ஹத்வா ரணே ராவணம்:
த்ஸ்யாம் ந்யஸ்ய விபீஷணம் புனரசௌ சீதாபதி புஷ்பகா: ரூட: ஸன் புரமாகத : ச பரத: சிம்ஹாசனச்தோ பபௌ:
ராமர் சேது பந்தனத்தை வானர சைன்யங்களை வைத்துக்கொண்டு நளனின் மேற்பார்வையில் கட்டி முடித்தார். இலங்கையை அடைந்தார். கும்பகர்ணன் ராவணன் ஆகியோரை யுத்தத்தில் வதம் செய்தார் விபீஷணனை லங்காதிபதியாக்கினார். சீதா தேவியோடு புஷ்பக விமானத்தில் ஆரோகணித்து நந்திக்ராமத்தில் பரதனைச் சந்தித்து பொறுப்பேற்று அயோத்தி மன்னனாக அவருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

7. उत्तरकाण्डम् – वसिष्ठः
श्रीरामो हयमेधमुख्यमखकृत् सम्यक् प्रजाः पालयन् कृत्वा राज्यमथानुजैश्च सुचिरं भूरिस्वधर्मान्वितौ ।
पुत्रौ भ्रातृसमन्वितौ कुशलवौ संस्थाप्य भूमण्डले सोऽयोध्यापुरवासिभिश्च सरयूस्नातः प्रपेदे दिवं ॥

7. வசிஷ்ட மகரிஷி ஸ்லோகம் – உத்தர காண்டம்
ஸ்ரீ ராமோ ஹயமேத முக்ய மச்வா க்ருத் சமயக் பிரஜா பாலயன்; க்ருத்வா ராஜ்ய மதான்னு ஜைஸ்ச சுசிரம் பூரிச்வ தர்மான்விதௌ ; புத்ரௌ பிராத்ரு சமன்விதௌ குச லவௌ சம்ஸ்தாப்ய பூ மண்டலே; ஸோ அயோத்யா புர வாஸி பிஸ்ச சரயுஸ் ஸ்நாத: ப்ரபேதே திவம்:

ராஜ்யத்தை பல்லாயிரம் ஆண்டு ஆட்சிசெய்து அஸ்வமேத யாகம் நடத்தி, குடிமக்களை சந்தோஷமாக வைத்து, ராமராஜ்யம் என்ற மேன்மை பெற்ற பெயர் பெற்று, சகோதரர்களோடு தர்ம பரிபாலனம் செய்து இந்த பூமண்டலத்தை சகோதரர்களுக்கும், அவர்கள் மக்களுக்கும்,லவ குசர்களுக்கும் அளித்து ஸ்ரீ ராமர் தனது அவதாரத்தை சரயு நதியில் முடித்தார்.

8. सर्वे ऋषयः
श्रीरामस्य कथासुधातिमधुरान् श्लोकानिमानुत्तमान् ये शृण्वन्ति पठन्ति च प्रतिदिनं तेऽघौघविध्वंसिनः।
श्रीमन्तो बहुपुत्रपौत्रसहिता भुक्त्वेह भोगांश्चिरं भोगान्ते तु सदार्चितं सुरगणैर्विष्णोर्ल्लभन्ते पदम्॥

8 ஏழு ரிஷிகளும் சேர்ந்து :

ஸ்ரீ ராமஸ்ய கதா சுதாதி மதுரான் ச்லோகாநிமான் உத்தமான்; யே ஸ்ருண் வந்தி படந்தி ச பிரதிதினம் தே;தௌதவித்வாம்ஸின
ஸ்ரீமந்தோ பஹு புத்திர பௌத்ர சாஹிதா புக்த்வேஹ போகாஸ்சிரம்; போகாந்தே து சதார்ச்சிதம் சுரகணைர் விஷ்ணோர் லபந்தே பதம்:

ஒவ்வோர் காண்டத்துக்கும் ஒரு ஸ்லோகமாக 7 ரிஷிகளும் (சப்த ரிஷிகள்) வழங்கிய ராமாயணம் தான் சப்தரிஷி ராமாயணம். இது ஒரு ஈடிணையற்ற பூந்தேன். இதை தினமும் செவி மடுத்தாலும், படித்தாலும், சகல சாஸ்திரவானாக ஒருவன் மாறலாம்.சர்வ சம்பத்தும் பெருகும். புத்திர பௌத்ராதிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்துவர். உலக வாழ்க்கை எல்லாம் இன்பமயம் என்பதாகும். விஷ்ணுபதம் சாஸ்வதமாகும்.

காளமேகப் புலவர் பாடிய பாடல்

காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,  முக்கால்,அரை,கால்,அரைக்கால், இருமா, மாகாணி,ஒருமா,கீழரை  என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து  எழுதுகிறார்,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது.

அதன் பொருள் 
முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு  காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது  காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை  வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்நரை வருவதற்கு  முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….  யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..  ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!