ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

விசித்திர மெக்கானிக்

அந்த காலத்தில் ஒரு விதமான காந்த விளக்கு என்று டைனமோ வைத்து ஒளிரும். மின்சாரம் இன்னும் அதை விழுங்காத காலம். டைனமோ மோட்டார் சக்தி பெற்று டப டப என்று சத்தம் போடும். விளக்கொளி இருளைப் போக்கும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுதும் இந்தமாதிரி காந்த விளக்கை ஒரு பக்தர் மெய்யப்ப செட்டியார் என்பவர் போட்டு வைத்தார்.

ஒரு நாள் மாலை நாலு மணிக்கு செட்டியார் அன்ன சத்திரத்திலிருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் ஒரு அறையில் இருந்த தான் நிறுவிய காந்த விளக்கு நிலையத்தை பார்வையிடச் சென்றார். போகும் வழியில் ஸ்வாமிகள் நின்று கொண்டு இருந்ததை கவனிக்கவில்லை.

” போ போ சக்ரம் எங்கே ஓடும் ?” என்கிறார் ஸ்வாமிகள். செட்டியார் அதை காதில் வாங்கவில்லை. அறைக்குள் சென்றார். உள்ளே காந்த மின் சக்தி உண்டாக்கும் இயந்திரம் ஓட்டும் மெக்கானிக் இருந்தார். செட்டியார் மெக்கானிக்கை மோட்டாரை ஒட்டு என்று சொன்னதும் வழக்கம்போல் மெக்கானிக் மோட்டார் ஸ்விட்ச்சை போட்டார். என்ன பண்ணியும் மோட்டார் அசையவில்லை. சக்கரம் ஓடவில்லை. என்னென்னவோ முயற்சிகள் நடந்தும் மோட்டார் உயிர்பெறவில்லை. இருள் நெருங்கியது. ஆலயம் இருண்டுவிடுமே .

யாரோ ”ஸ்வாமிகளை போய்ப் பாருங்கள்” என்று சொல்ல செட்டியார் வெளியே வந்து ஸ்வாமிகளைத் தேடினார். நல்ல வேளை ஸ்வாமிகள் குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரியோடு ஆலய பிரஹாரத்தில் நின்று கொண்டு இருந்தார். அவரை அழைதார்கள்

ஸ்வாமிகள் சாஸ்திரியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு இயந்திர அறைக்குள் சென்றார். உள்ளே ஒரு பெரிய இயந்திரத்தின் சக்கரம் இருந்தது. அதைக் கையால் தொட்டு தடவினார். வெளியே வந்து அந்த இயந்திரத்தைப் பார்த்து ”சிவலிங்கம் சிவோஹம் ” என்று சொல்லி சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். அவ்வளவு தான். கையை ஜாடை காட்டி மோட்டாரை ஒட்டு என்கிறார். மெக்கானிக் இப்போது ஸ்விட்ச்சை முடுக்கினான். மோட்டார் சக்கரம் தட தட என்று வேகமாக வழக்கம்போல சுழல ஆரம்பித்து விட்டது. டைனமோ இயங்கியது. என்ன ஆச்சரியம்! . சுவாமிகளது அபார சக்தியை அனைவரும் வியக்கும்போது அவர் தான் அங்கே இல்லையே.

Ragavendra swamy & Sir Thomas Munroe

Sir Thomas Munroe was the Collector of Bellary in 1800, the Madras Government ordered him to procure the entire income from the Math and Manthralaya village. When the Revenue officials were unable to comply with this order, Sir Thomas Munroe visited the Math for investigation. He removed his hat and shoes and entered the sacred precincts. Sri Raghavendraswamy emerged from the Brindavan and conversed with him for sometime, about the resumption of endowment. The Saint was visible and audible only to Munroe who received Manthraksha. The Collector went back and wrote an order in favour of the Math and the village. This notification was published in the Madras Government Gazette in Chapter XI and page 213, with the caption “Manchali Adoni Taluka”. This order is still preserved in Fort St. George and Manthralayam.

சதுரகிரி

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்

திருஅண்ணாமலை

திருஅண்ணாமலையை பற்றி நமக்கு தெரியாத ஒரு அபூர்வ தகவல்.

சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும்.
ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான விவரம்…

முகலாயர்கள் காலத்தில் நம் அண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது. அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான விரேகிய முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார்.

நந்தி கால்மாற்றிய வரலாறு
*******************************

முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.
அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?
அதற்கு அந்த ஐவர் எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர்.
அதற்கு அரசன் உம் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல் என்று கூறி வெட்டிவிட்டான்.

உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் “வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்” என்றார்
உடனே அந்த சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற ஐவரும் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் “இச்சிறு பாலகனா பக்தன் ” என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . அச்சிறுபாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று அவர்களை காப்பாற்றினான்.

ஐவரும் நடந்ததை கூறி
அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்த அவர்களை அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான்.
உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தார்.
அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறி நம்ப மறுத்தான்.

சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான்.
அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.

அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர். அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனை கண்ட ஐவரும் பாலகனும் ஓம் நமசிவாய அண்ணாமலைக்கு அரோகரா எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர்.

இதனையும் நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.

உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். கருணைக்கடல் அல்லவா நம் அண்ணாமலையார் உடனே நம் பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் நம் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்ளடைத்துவிட்டு சென்றுவிட்டான்

அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.