ஶ்யாமலாதண்டகம்

॥ ஶ்யாமலாதண்டகம் காலிதா³ஸவிரசிதம் ॥
॥ அத² ஶ்யாமலா தண்டகம்
॥ த்யானம் ॥

மாணிக்யவீணாமுபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுலவாக்விலாஸாம் ।
மாஹேந்த்ரனீலத்யுதிகோமலாங்கீம்
மாதங்க³கன்யாம் மனஸா ஸ்மராமி ॥ 1॥

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்குமராகஶோணே ।
புண்ட்ரேக்ஷுபாஶாங்குஶபுஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத: ॥ 2॥

॥ வினியோக: ॥

மாதா மரகதஶ்யாமா மாதங்கீ மதஶாலினீ ।
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ ॥ 3॥

॥ ஸ்துதி ॥

ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுதே ।
ஜய ஸங்கீதரஸிகே ஜய லீலாஶுகப்ரியே ॥ 4॥

॥ தண்டகம் ॥

ஜய ஜனனி ஸுதா⁴ஸமுத்ராந்தருத்யன்மணீத்வீபஸம்ரூட் –
பில்வாடவீமத்யகல்பத்ருமாகல்பகாதம்பகாந்தாரவாஸப்ரியே
க்ருʼத்திவாஸப்ரியே ஸர்வலோகப்ரியே

ஸாத³ராரப்தஸங்கீதஸம்பாவனாஸம்ப்ரமாலோல-
நீபஸ்ரகாபத்தசூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே

ஶேக²ரீபூ⁴தஶீதாம்ஶுரேகா²மயூகா²வலீப³த்³த⁴-
ஸுஸ்னிக்³த⁴னீலாலகஶ்ரேணிஶ்ருʼங்கா³ரிதே லோகஸம்பா⁴விதே
காமலீலாத⁴னுஸ்ஸன்னிப⁴ப்⁴ரூலதாபுஷ்பஸந்தோ³ஹஸந்தே³ஹக்ருʼல்லோசனே
வாக்ஸுதா⁴ஸேசனே சாருகோ³ரோசனாபங்ககேலீலலாமாபி⁴ராமே ஸுராமே ரமே

ப்ரோல்லஸத்³த்⁴வாலிகாமௌக்திகஶ்ரேணிகாசந்த்³ரிகாமண்ட³லோத்³பா⁴ஸி
லாவண்யக³ண்ட³ஸ்த²லன்யஸ்தகஸ்தூரிகாபத்ரரேகா²ஸமுத்³பூ⁴தஸௌரப்⁴ய-
ஸம்ப்⁴ராந்தப்⁴ருʼங்கா³ங்க³னாகீ³தஸாந்த்³ரீப⁴வன்மந்த்³ரதந்த்ரீஸ்வரே
ஸுஸ்வரே பா⁴ஸ்வரே

வல்லகீவாத³னப்ரக்ரியாலோலதாலீத³லாப³த்³த⁴-
தாடங்கபூ⁴ஷாவிஶேஷான்விதே ஸித்³த⁴ஸம்மானிதே

தி³வ்யஹாலாமதோ³த்³வேலஹேலாலஸச்சக்ஷுராந்தோ³லனஶ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக-
நீலோத்பலே ஶ்யாமலே பூரிதாஶேஷலோகாபி⁴வாஞ்சா²ப²லே ஶ்ரீப²லே

ஸ்வேத³பி³ந்தூ³ல்லஸத்³பா²லலாவண்ய நிஷ்யந்த³ஸந்தோ³ஹஸந்தே³ஹக்ருʼன்னாஸிகாமௌக்திகே
ஸர்வவிஶ்வாத்மிகே ஸர்வஸித்³த்⁴யாத்மிகே காலிகே முக்³த்³த⁴மந்த³ஸ்மிதோதா³ரவக்த்ர-
ஸ்பு²ரத் பூக³தாம்பூ³லகர்பூரக²ண்டோ³த்கரே ஜ்ஞானமுத்³ராகரே ஸர்வஸம்பத்கரே
பத்³மபா⁴ஸ்வத்கரே ஶ்ரீகரேgam

குந்த³புஷ்பத்³யுதிஸ்னிக்³த⁴த³ந்தாவலீனிர்மலாலோலகல்லோலஸம்மேன
ஸ்மேரஶோணாத⁴ரே சாருவீணாத⁴ரே பக்வபி³ம்பா³த⁴ரே

ஸுலலித நவயௌவனாரம்ப⁴சந்த்³ரோத³யோத்³வேலலாவண்யது³க்³தா⁴ர்ணவாவிர்ப⁴வத்
கம்பு³பி³ம்போ³கப்⁴ருʼத்கந்த²ரே ஸத்கலாமந்தி³ரே மந்த²ரே

தி³வ்யரத்னப்ரபா⁴ப³ந்து⁴ரச்ச²ன்னஹாராதி³பூ⁴ஷாஸமுத்³யோதமானானவத்³யாங்க³-
ஶோபே⁴ ஶுபே⁴

ரத்னகேயூரரஶ்மிச்ச²டாபல்லவப்ரோல்லஸத்³தோ³ல்லதாராஜிதே யோகி³பி:⁴
பூஜிதே விஶ்வதி³ங்மண்ட³லவ்யாப்தமாணிக்யதேஜஸ்ஸ்பு²ரத்கங்கணாலங்க்ருʼதே
விப்⁴ரமாலங்க்ருʼதே ஸாது⁴பி:⁴ பூஜிதே வாஸராரம்ப⁴வேலாஸமுஜ்ஜ்ருʼம்ப⁴
மாணாரவிந்த³ப்ரதித்³வந்த்³விபாணித்³வயே ஸந்ததோத்³யத்³த³யே அத்³வயே
தி³வ்யரத்னோர்மிகாதீ³தி⁴திஸ்தோமஸந்த்⁴யாயமானாங்கு³லீபல்லவோத்³ய
ந்னகே²ந்து³ப்ரபா⁴மண்ட³லே ஸன்னுதாக²ண்ட³லே சித்ப்ரபா⁴மண்ட³லே ப்ரோல்லஸத்குண்ட³லே

தாரகாராஜினீகாஶஹாராவலிஸ்மேர சாருஸ்தனாபோ⁴க³பா⁴ரானமன்மத்⁴ய-
வல்லீவலிச்சே²த³ வீசீஸமுத்³யத்ஸமுல்லாஸஸந்த³ர்ஶிதாகாரஸௌந்த³ர்யரத்னாகரே
வல்லகீப்⁴ருʼத்கரே கிங்கரஶ்ரீகரே

ஹேமகும்போ⁴பமோத்துங்க³ வக்ஷோஜபா⁴ராவனம்ரே த்ரிலோகாவனம்ரே
லஸத்³வ்ருʼத்தக³ம்பீ⁴ர நாபீ⁴ஸரஸ்தீரஶைவாலஶங்காகரஶ்யாமரோமாவலீபூ⁴ஷணே
மஞ்ஜுஸம்பா⁴ஷணே

சாருஶிஞ்சத்கடீஸூத்ரனிர்ப⁴த்ஸிதானங்க³லீலத⁴னுஶ்ஶிஞ்சினீட³ம்ப³ரே
தி³வ்யரத்நாம்ப³ரே

பத்³மராகோ³ல்லஸ ந்மேக²லாமௌக்திகஶ்ரோணிஶோபா⁴ஜிதஸ்வர்ணபூ⁴ப்⁴ருʼத்தலே
சந்த்³ரிகாஶீதலே விகஸிதனவகிம்ஶுகாதாம்ரதி³வ்யாம்ஶுகச்ச²ன்ன
சாரூருஶோபா⁴பராபூ⁴தஸிந்தூ³ரஶோணாயமானேந்த்³ரமாதங்க³
ஹஸ்மார்க்³க³லே வைப⁴வானர்க்³க³லே ஶ்யாமலே கோமலஸ்னிக்³த்³த⁴
நீலோத்பலோத்பாதி³தானங்க³தூணீரஶங்காகரோதா³ர
ஜங்கா⁴லதே சாருலீலாக³தே நம்ரதி³க்பாலஸீமந்தினீ
குந்தலஸ்னிக்³த்³த⁴னீலப்ரபா⁴புஞ்சஸஞ்ஜாதது³ர்வாங்குராஶங்க
ஸாரங்க³ஸம்யோக³ரிங்க²ன்னகே²ந்தூ³ஜ்ஜ்வலே ப்ரோஜ்ஜ்வலே
நிர்மலே ப்ரஹ்வ தே³வேஶ லக்ஷ்மீஶ பூ⁴தேஶ தோயேஶ வாணீஶ கீனாஶ
தை³த்யேஶ யக்ஷேஶ வாய்வக்³னிகோடீரமாணிக்ய ஸம்ஹ்ருʼஷ்டபா³லாதபோத்³தா³ம–
லாக்ஷாரஸாருண்யதாருண்ய லக்ஷ்மீக்³ருʼஹிதாங்க்⁴ரிபத்³ம்மே ஸுபத்³மே உமே

ஸுருசிரனவரத்னபீட²ஸ்தி²தே ஸுஸ்தி²தே
ரத்னபத்³மாஸனே ரத்னஸிம்ஹாஸனே ஶங்க²பத்³மத்³வயோபாஶ்ரிதே விஶ்ருதேதத்ர விக்⁴னேஶது³ர்கா³வடுக்ஷேத்ரபாலைர்யுதே மத்தமாதங்க³
கன்யாஸமூஹான்விதே பை⁴ரவைரஷ்டபி⁴ர்வேஷ்டிதே
மஞ்சுலாமேனகாத்³யங்க³நாமானிதே தே³வி வாமாதி³பி:⁴ ஶக்திபி⁴ஸ்ஸேவிதே
தா⁴த்ரி லக்ஷ்ம்யாதி³ஶக்த்யஷ்டகை: ஸம்யுதே மாத்ருʼகாமண்ட³லைர்மண்டி³தே
யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைரர்சிதே

பை⁴ரவீ ஸம்வ்ருʼதே பஞ்சபா³ணாத்மிகே பஞ்சபா³ணேன ரத்யா ச
ஸம்பா⁴விதே ப்ரீதிபா⁴ஜா வஸந்தேன சானந்தி³தே ப⁴க்திபா⁴ஜம் பரம் ஶ்ரேயஸே
கல்பஸே யோகி³நாம் மானஸே த்³யோதஸே ச²ந்த³ஸாமோஜஸா ப்⁴ராஜஸே கீ³தவித்³யா
வினோதா³தி த்ருʼஷ்ணேன க்ருʼஷ்ணேன ஸம்பூஜ்யஸே ப⁴க்திமச்சேதஸா வேத⁴ஸா
ஸ்தூயஸே விஶ்வஹ்ருʼத்³யேன வாத்³யேன வித்³யாத⁴ரைர்கீ³யஸே

ஶ்ரவணஹரத³க்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீ³யஸே
யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைரர்ச்யஸே

ஸர்வஸௌபா⁴க்³யவாஞ்சா²வதீபி⁴ர் வதூ⁴பி⁴ஸ்ஸுராணாம் ஸமாராத்⁴யஸே
ஸர்வவித்³யாவிஶேஷத்மகம் சாடுகா³தா² ஸமுச்சாரணாகண்ட²மூலோல்லஸத்³-
வர்ணராஜித்ரயம் கோமலஶ்யாமலோதா³ரபக்ஷத்³வயம் துண்ட³ஶோபா⁴திதூ³ரீப⁴வத்
கிம்ஶுகம் தம் ஶுகம் லாலயந்தீ பரிக்ரீட³ஸே

பாணிபத்³மத்³வயேனாக்ஷமாலாமபி ஸ்பா²டிகீம் ஜ்ஞானஸாராத்மகம் var  மாலாகு³ண
புஸ்தகஞ்சங்குஶம் பாஶமாபி³ப்⁴ரதீ தேன ஸஞ்சிந்த்யஸே தஸ்ய
வக்த்ராந்தராத் க³த்³யபத்³யாத்மிகா பா⁴ரதீ நிஸ்ஸரேத் யேன வாத்⁴வம்ஸனாதா³
க்ருʼதிர்பா⁴வ்யஸே தஸ்ய வஶ்யா ப⁴வந்திஸ்திய: பூருஷா: யேன வா
ஶாதகம்ப³த்³யுதிர்பா⁴வ்யஸே ஸோபி லக்ஷ்மீஸஹஸ்ரை: பரிக்ரீட³தே

கின்ன ஸித்³த்⁴யேத்³வபு: ஶ்யாமலம் கோமலம் சந்த்³ரசூடா³ன்விதம்
தாவகம் த்⁴யாயத: தஸ்ய லீலா ஸரோவாரிதீ:⁴ தஸ்ய கேலீவனம்
நந்த³னம் தஸ்ய ப⁴த்³ராஸனம் பூ⁴தலம் தஸ்ய கீ³ர்தே³வதா கிங்கரி
தஸ்ய சாஜ்ஞாகரீ ஶ்ரீ ஸ்வயம்

ஸர்வதீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே
ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே
ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே
ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே
ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே
ஸர்வ வர்ணாத்மிகே ஸர்வகீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே
ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே
ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம்
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ
தே³வி துப்⁴யம் நம:

॥ இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ॥

 

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் தரிசனம்

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்

குரு

குரு-கேள்வி பதில்
1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது
2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.
3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.
6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.
7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி
8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுhதர்
9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.
10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்
11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.
12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.
13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.
14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.
15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை ருளை மறையச் செய்ய – யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.
16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.
17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.
18. குருவுக்கு தகுதி வேண்டுமா? – கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.
19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது
20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்
21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்
22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு
23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.
24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும், சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம் தேவையில்லை.
25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.
26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.
27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்
28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்
29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.
30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .
31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.
32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது
33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.
34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்
34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.
35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.
தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)
36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.
37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.
38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரே குருவாவர்.
39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.
40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.
41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா
42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.
43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.
44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.
45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.
46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்
47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.
48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.
49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.
50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.
51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.
52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி
53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்
54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.
55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.
56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்
57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.
58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.
59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் வெளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.
60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்
61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.
62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்
63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.
64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.
65. குரு நேசம்?
சிவ நேசம்.
66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.
67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.
68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.
69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.
70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா
71. நான் குருவாக முடியுமா?
முடியும் ‘நான்’ என்பதை அறிந்து ;நான்’ என்பதை மறந்தால்
72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.
73. குருவுக்கு ‘நான்’ என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் – அகங்காரம்
நான் – தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.
74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.
75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.
76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.
77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் – மலர் தேடும் வண்டு
குருவே மலர் – உன்னதம் தேன்
78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் – மெய் தன்னால் பரவும்.
79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.
81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.
82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.
83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.
84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் – குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.
85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்
86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.
87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா
88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்
89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.
90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.
91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.
92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை
93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்
94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.
95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.
96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.
97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.
98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.
99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.
100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.
101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்
102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.
103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்
104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்
106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.
108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.
109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாக இருப்பார்.
110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே
111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.
112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.
113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.
114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.
115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.
116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் – நன்றி, எறும்பு – உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.
118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்
119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)
120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.
121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.
122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;
123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.
124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.
125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.
126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.
127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.
128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.
129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.
131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் – மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.
132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.
133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.
134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.
135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.
137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.
138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ
139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.
140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.
141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.
142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே
146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.
147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்……..
149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.
151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.
152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.
153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.
154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.
155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.
156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் – வழி மெய் ஞானம் பெற்று .
157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.
158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.
159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு – விடிவிப்பவர்
யோகி – அருள்பவர்
160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.
161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.
162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.
163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

கணு பாட்டு

கணு பாட்டு

கனு அன்னைக்கு ,நம்மை, விட  வயதில், மூத்த பெண் மணிகளை நமஸ்கரித்து,அவர் களிடம்,நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி, கையில்  கொண்டு போகும் பசு மஞ்சளை  கொடுப்போம் ,அவர்களும், நல்ல வார்த்தைகளை கூறிக்கொண்டே நெற்றியில்  மஞ்சளை கீற்றி விடுவார்கள்.

கணு பாட்டு

             தாயோடும், தந்தையோடும்,

            சீரோடும். ,    சிறப்போடும்,  

           பேரோடும்,    புகழோடும்,

             பெருமையோடும், கீர்த்தியோடும

             சிறுவயதில் ,  தாலிகட்டி

            பெரியவளாகி  பிள்ளைகள் பெற்று

            கொண்டவன்,  மனம் ,  மகிழத்

            தையல்நாயகி    போலத்

          தொங்கத்தொங்க த்தாலிகட்டித்

            தொட்டிலும், பிள்ளையுமாக,

           மாமியார்     மாமனார்  மெச்ச,

           நாத்தியும்    மாமியும்  போற்ற

        பிறந்தகத்தோர்,  பெருமை விளங்க,ப்,

       பெற்ற பிள்ளைகள் , ஆயுள். ஓங்க,

      உற்றார்         உறவினரோடு

          புத்தாடை.   புது மலர். சூடி

      புது மாப்பிள்ளை ,   மருமகளோடு,

        புது. புது  சந்தோஷம்  பெருகி,

ஆல்போல். தழைத்து. அருகே போல்.  ஏரோடி

          என்றென்றும்,   வாழணும்

எப்போதும் சிரித்த முகத்தோடு,  இருக்கணும்.

என்று. சொல்லி,  வாழ்த்துவர்.  பிறகு, வீட்டிற்கு ,வந்து காக்காய் பொடி வைத்து, அதை ஜலம் தெளித்து,நீர்  சுற்றி  மணி அடித்து  சூடன், காண்பித்து, பிரார்த்திக்க

வேண்டும்,    காக்காய் பொடி வைத்தேன்

கனுப்பொடி  வைத்தேன்,காக்காய்க்கு, எல்லாம். கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும், என். கூட்டம், பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம், பண்ணிவிட்டு, குளித்து கலந்த சாதங்கள், செய்து, ஸவாமிக்கு நிவேதித்து, காக்காய்க்கு அன்ன மிட்டு பிறகு சாப்பிடுவோம்.

*—-காக்காய் கூட்டம் பிரியவே பிரியாது,

என்பது  திண்ணம், அதனாலதான் , முன்னோர்களாக ,பாவிக்கிறோம்.)