பெருமாள் ஸ்தோத்திரம்- Popular perumal Slokas

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின் உள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண் புரைக்க மாட்டேனே!
==================================top

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!
==================================top

அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக்கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனிஎன்கோ பால் என்கேனோ
==================================top

பச்சைமாமலை போல் மேனிபவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகருளானே.
==================================top

கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூசிப்போம்
==================================top

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம்செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னை யடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பெருமானை வனங்கு!
==================================top