சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

சிவனை நினைத்தாலே பல்வேறு பலன்களைத் தரக்கூடியவர். சிவ நாமமும், சிவ பூஜையும் நம்மை நல்வழிப்படுத்துவதோடு, முக்தியை தர வல்லவர்.

1. ஆற்று மணலால் சிவ லிங்கம் செய்து பூஜித்தால் பூமி லாபம் பெறலாம்.

2. புற்று மண்ணால் லிங்கம் செய்து வழிபட முக்தியைப் பெறலாம்.

3. பச்சரிசியால் லிங்கம் செய்து வழிபட்டால் விரும்பிய பொருள் சேரும்.

4. சந்தன லிங்கம் செய்து வழிபட அனைத்து இன்பங்களும் வந்து சேரும்.

5. திருநீறு லிங்கம் (விபூதி லிங்கம்) வைத்து வழிபட எல்லா வித செல்வங்களும் குவியும்.

6. மலர் மாலைகளால் லிங்கம் செய்து வழிபட குறையாத வாழ் நாள் கிடைக்கும்.

7. அரிசி மாவால் சிவ லிங்கம் செய்து வழிபட உடல் வலிமை பெறும்.

8. சோறு லிங்கம் (அன்னம் லிங்கம்) செய்து வழிபட உணவுப் பற்றாக்குறை நீங்கும்.

9. பழங்களால் லிங்கம் செய்து வழிபட சிறப்பான இன்பமான வாழ்வு அமையும்.

10. தயிர் லிங்கம் நற்குணத்தைத் தருவார்.

11. தண்ணீர் லிங்கம் – அனைத்தையும் மேன்மையாக்குவார்.

12. கூர்ச்சம் எனப்படும் முடிச்சிட்ட நாணல் லிங்கத்தை வழிபட முக்தி கிடைக்கும்.

13. சர்க்கரை, வெல்லம் லிங்கம் செய்து வழிபட விரும்பிய வாழ்க்கையும், இன்பமும் கிடைக்கும்.

14. பசுவின் சாணத்தால் லிங்கம் செய்து வழிபட நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

15. பசு வெண்ணெய்யை லிங்கம் செய்து வழிபட மன மகிழ்ச்சி ஏற்படும்.

16. ருத்திராட்ச லிங்கத்தை வைத்து வழிபட நல்லறிவு கிடைக்கும்.

இப்படி பல்வேறு சிவ லிங்கத்தை வழிபட்டு அனைத்து வித நல்வினைகளைப் பெற்றிடுங்கள்.

ஓம் சிவாய நம

சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்? சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும்.

சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும் சிவனுக்கு தனி உருவம் கிடையாது. அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.

சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் ‘அசல லிங்கம்’ என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை ‘பரார்த்த லிங்கம்’ என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும்.

அவற்றுள், சுயம்பு லிங்கம் என்பது தானாகத் தோன்றியது ஆகும். சிவபெருமானின் புதல்வர்களான வினாயகர் மற்றும் முருகப் பெருமான் போன்றவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டதை காணலிங்கம் என்பார்கள். தைவிக லிங்கம் என்பது விஷ்ணு பகவானும் பிற தேவர்களும் சேர்ந்து ஸ்தாபித்தவை ஆகும். ஆரிட லிங்கம் ரிஷி முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை. அவற்றை சில ராக்ஷசர்களும் அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்கள் ஸ்தாபித்தவற்றை மானுட லிங்கம் என்பார்கள். ஆலய கோபுரங்களையே கூட தூல லிங்கம் என்றும் கூறுவார்கள்.

இரண்டாவது வகை சிவலிங்கமானது இதயத்தில் சிவலிங்கத்தின் ஒரு உருவை நினைத்து இஷ்ட லிங்கமாக பூஜிக்கப்படும் ‘சலன லிங்கம்’ என்பதாகும்.

மூன்றாவது வகையிலான சிவலிங்கங்கள் ஹோமங்களில் பூஜிக்கப்படும் ‘அசலசல லிங்கம்’ ஆகும்.

நான்காவது வகை ‘சலாசல லிங்கம்’ எனப்படும் காணலிங்கமும் நவரத்தினங்களிலான லிங்கங்களும் ஆகும்.

சிவ பூஜையை அனைவராலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதற்குக் கட்டுப்பாடுகள் நிறையவே உள்ளன. பூஜைகளில் இரு வகைகள் உள்ளன. சாதாரணமாக வீடுகளில் செய்யப்படும் தினசரி பூஜை மற்றும் இரண்டாவது குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டு செய்யப்படும் பூஜைகள். தினசரி வீடுகளில் சிவபூஜையை ஆசாரத்தோடு செய்யலாம். ஆனால் ஞான மார்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் செய்ய வேண்டிய சாஸ்திரோத்தமான சிவ பூஜையை முறைப்படி ஒரு பண்டிதரிடம் இருந்து கற்றறிந்து அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அதன் பின்னரே பூஜைகளை செய்யத் துவங்க வேண்டும். அதற்கு பல நியமங்கள் உண்டு…

ராம பாதுகை

பரதன் அன்றாடம் துயில் எழுந்து நேராக தர்பாருக்குச் செல்வான். அங்கே சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைக்கு வணக்கம் செலுத்துவான். ‘தங்கள் ஆட்சியில் என்றும், எல்லோருக்கும் நன்மையே விளைய வேண்டும் அண்ணா’ என வேண்டிக் கொள்வான்.

ஒரு நாள் பிறக்கிறது என்றால், அவனைப் பொறுத்தவரை சந்தோஷம் தான். ஆமாம், அந்த ஒருநாள் தன் அண்ணன் ராமன் அயோத்திக்குத் திரும்பும் நாள் நெருங்குகிறது அல்லவா?

பரதனின் மனநிலை, அவன் தம்பி சத்ருக்னன், வசிஷ்டர் முதலான ரிஷிகள், ஏன், அயோத்தி மக்களிடமும் நிலவியது.

இத்தனைக்கும் ராமன் நகர்வலம் வந்து மக்களைச் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. தசரதரின் ஆட்சியில் மக்கள் நலமாக வாழ்ந்ததால் ராமனின் தலையீடும் இல்லை. இருந்தாலும் ஆட்சி நிகழ்வுகளின் நீக்கு போக்கை கவனித்து வந்தான்.

எனினும் அயோத்தி மக்கள் மற்றும் அரண்மனைவாசிகளுக்கு ‘ராமன்’ என்ற சொல்லே புத்துணர்வை தந்தது. அயோத்தியில் தங்களோடு ராமன் இருக்கிறான் என்பதே மகிழ்ச்சி அளித்தது. சில சமயம் உப்பரிகையில் அவன் வந்து நிற்கும் போது அந்த வழியாகச் செல்பவர்கள் வணக்கம் செலுத்த, ராமனும் பதிலுக்கு வணக்கம் செலுத்துவான். அதை மக்கள் பாக்கியமாகக் கருதினர். அந்தளவுக்கு ராமன் என்னும் காந்தம் அவர்களை ஈர்த்தது. ஆனால், அவன் காட்டுக்குச் சென்ற பின்னர் அவர்களின் முகத்தில் கவலை படர்ந்தது.

குடிமக்களுக்கே அந்நிலை என்றால், 

பரதன் பற்றிச் சொல்ல வேண்டுமா? ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று சொல்லி ராமன் புறக்கணித்த வருத்தம் அவன் மனதை விட்டு அகலவே இல்லை. வசிஷ்டர், அவனது மாமனார் ஜனகர் கேட்டும் கூட அவன் தன் நிலையில் இருந்து மாறவில்லை. எப்படியாவது ராமனை அயோத்திக்கு அழைத்து வருவது கங்கணம் கட்டிக் கொண்டு சென்ற பரதன் ஏமாற்றம் அடைந்தான். ராமன் அயோத்தி திரும்ப மறுத்த நிலையில் பாதுகையாவது தருமாறு பரதன் கேட்டான்.

தம்பியின் இந்த விருப்பத்தையாவது நிறைவேற்ற சம்மதித்தான் ராமன். காட்டில் பாதுகை இல்லாமல் கரடு முரடான வழியில் நடக்க நேரும் என்பதையும், இன்னும் 14 ஆண்டுகள் இப்படியே காலம் தள்ள வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டே தன் பாதுகைகளைத் தியாகம் செய்தான். பரதன் சமாதானம் அடைந்தால் போதும் என்பது ராமனின் எண்ணம்.

அந்தப் பாதுகைகளை தலைமீது சுமந்து வந்த பரதன், அவற்றை சிம்மாசனத்தில் அமர்த்தி, மலரிட்டு, அர்ச்சித்து, வழிபட்டு தன்னையும், அயோத்தி நாட்டையும் நல்வழிப்படுத்துமாறு வேண்டினான்.

என்ன தான் பாதுகைகள் என்றாலும் ராமனுக்குச் சமமாகுமா? ஆனாலும் ராமனின் ஆசி இருந்ததால் அயோத்தியில் எந்தக் குழப்பமும் இல்லை. மக்களுக்கு குறை ஏதும் இல்லை. ஆனால் ராமனின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தான் பரதன்.

ஒருநாள் குடிமக்கள் இருவருக்கு இடையில் வழக்கு ஒன்று எழுந்ததாக கேள்விப்பட்ட பரதன் வருந்தினான். ராம பாதுகைகளின் நல்லாட்சியில் எங்கு தவறு நடந்தோ தெரியவில்லையே… என துடித்தான். இப்படி ஒரு நெருக்கடி உருவாகக் காரணம் என்ன? என சிந்தித்தபடி சபைக்கு வந்தான் பரதன். பின் தொடர்ந்தான் சத்ருக்னன்.

அவையில் இரு விவசாயிகள் கைகட்டி நின்றிருந்தனர்.

சிம்மாசனத்தை அலங்கரித்த பாதுகைகளை வணங்கிய பரதன், ” உங்களுக்குள் என்ன பிரச்னை?” எனக் கேட்டான்.

அவர்களில் ஒருவன், ”ஐயனே! எனக்குச் சொந்தமாக விளைநிலம் இருந்தது. அதை இவருக்கு விற்றேன்”

”அதற்கு பணம் தர மறுக்கிறாரா?” எனக் குறுக்கிட்டான் பரதன்.

”இல்லை ஐயனே! பேசியபடி பணம் வாங்கி விட்டேன். பிரச்னை அதுவல்ல”

”வேறு என்ன?” கேட்டான் பரதன்.

நிலத்தை வாங்கியவன். ”ஐயனே! வாங்கிய நிலத்தை நான் கலப்பையால் உழுதேன். அப்போது அங்கு தங்கப் புதையல் கிடைக்கப் பெற்றேன்.”

பரதனுக்கு வழக்கின் தன்மை புரிவது போலிருந்தது.

”உடனே இந்தப் புதையல் உங்களுக்கு தான் சொந்தம். இது உங்கள் நிலத்தடியில் இருந்தது என இவரிடம் ஒப்படைத்தேன்.”

”நிலத்தை விற்றேன் என்றால் அடியில் உள்ள புதையலையும் சேர்த்து விற்றதாகத் தானே அர்த்தம்?” என்றார் விற்றவர்.

”இல்லை! நிலத்தை மட்டும் தான் எனக்கு விற்றீர்கள். அதனடியில் இருக்கும் புதையல் குறித்து தெரிந்திருக்க தங்களுக்கு நியாயமில்லை. ஆகவே புதையல் உங்களுக்கே சொந்தம்” என்றார் நிலத்தை வாங்கியவர்.

பெருமிதத்துடன் அவர்களை பார்த்த பரதன், ”எத்தனை நேர்மையாளர்கள் இவர்கள்! மக்கள் இப்படி தர்ம வழியில் வாழ சிம்மாசனத்தில் இருக்கும் ராம பாதுகைகள் தானே காரணம்! ஒரு வேளை நான் ஆட்சி நடத்தினால் இப்படி நேர்மையுடன் இருப்பார்களா? புதையல் தனக்கே சொந்தம் என சண்டையிட்டிருப்பர்!

ராமனின் நேர்மை, பெருந்தன்மை, பரந்த குணம் தான் மக்களிடம் வேரூன்றி விட்டது! மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பதே உண்மை!

போதும் என வாழ்ந்திடும் அவர்களின் பொன்மனம் பரதனுக்கு புரிந்தது. அயோத்தி மக்களுக்கு பயன்படும் விதத்தில் பணத்தை செலவழிக்க முடிவெடுத்தான். அதை சபையோர் அனைவரும் ஏற்றனர்.

ராமன் ஆண்டால் என்ன… ராம பாதுகை ஆண்டால் என்ன! ராம உணர்வு இருக்கும் வரை தர்மம் காக்கப்படும் என்பது அங்கே என்பது நிரூபணமானது

திருக்கண்ணங்குடி

வஸிஷ்ட மகரிஷிக்குக் கண்ணபிரானிடம் விசேஷ ஈடுபாடு உண்டு. கண்ணனுக்கு மிகவும் பிடித்த பொருளான  வெண்ணெ யாலேயே கிருஷ்ண விக்கிரகம் செய்து, அந்தக் கண்ணனை வழிபட்டு வந்தார் அவர். 

அவரது ஆழ்ந்த  பக்தியின் காரணமாக வெண்ணெயாலான அந்த விக்கிரகம் உருகாமலேயே இருந்தது.

அவரது சீடர்களிடம்,  “எம்பெருமான் எடுக் கும் திருமேனிகள் எப்போதும் மாறுவதே இல்லை. அவனது பெருமைகள், தாமரைக் கண்கள்,  ஞானம், தூய்மை முதலியவை எப்போதும் மாறாது. மாறாத தன்மை கொ ண்டவன் இறைவன்” என்று அடிக்கடி  சொ ல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக உருகாமல் இருக்கும் வெண்ணெய் விக்கிரகத்தைக் காட்டுவார்.

“வெண்ணெய்யால் நான் அமைத்த இந்த விக்கிரகம் கூட உருகாமல், மாறாமல் இரு க்கிறது பாருங்கள்!” என்பார்.

ஒருநாள் வசிஷ்டர் தியானத்தில் ஆழ்ந்தி ருந்தபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒரு வன் அவரது ஆஸ்ரமத்துக்குள்  நுழைந்தா ன். வசிஷ்டரின் வெண்ணெய் கண்ண னை கண்டான். வெண்ணெயை உண்ண வேண்டும் என்று அவனுக்கு  ஆவல் ஏற்ப ட்டதால், அந்த வெண்ணெயாலான விக்கி ரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி எடுத்து வாயில்  போட்டுக் கொண்டான்.

விக்கிரகத்தின் சிறிய பகுதியே மிச்சம் இருந்த நிலையில் தியானத்திலிருந்து கண்விழித்துப்  பார்த்தார் வசிஷ்டர். மீத முள்ள பகுதியையும் விழுங்கிவிட்டு ஆசிர மத்தை விட்டு ஓடினான் அந்தச் சிறுவன். 

வசிஷ்டர்  அவனைத் துரத்திக் கொண்டு சென்றார். அருகிலுள்ள காட்டை நோக்கி அந்தச் சிறுவன் ஓடினான். அங்கே ஒரு மகிழ மரத்தடியில் சில ரிஷிகள் தவம் புரிந்து கொண்டிருந்தார்கள். தங்கள் தவ வலிமையால் ஓடி வரும்  சிறுவன் சாட்சாத் கண்ணபிரான்தான் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். 

துரத்திக் கொண்டு ஓடிவந்த வசிஷ்டர்,  “அவனை விடாதீர்கள்! பிடித்துக் கட்டுங்கள்!” என்றார். அந்த ரிஷிகளும் கண்ணனைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்  போட்டார்கள்.

“ஏனடா என் கண்ணனை விழுங்கினாய்?” என்று கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டார் வசிஷ்டர்.  

“மாறுதல் இல்லாத அந்த விக்கிரகத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி.என் வயிற் றுக்குள் எப்போதும் மாறாமல்  உங்கள் கண்ணன் இருப்பான்!” என்று சொல்லி அவன் புன்னகைத்தபோது, அவன் கண் ணபிரான் என்று வசிஷ்டரும்  உணர்ந்து கொண்டார்.

வசிஷ்டரும் மற்ற ரிஷிகளும், “கண்ணா! இப்போது அந்தவிக்கிரகத்தை நீ விழுங்கி விட்டால் இனி நாங்கள் எப்படி  உன்னைக் கண்கொண்டு தரிசிப்பது?” என்று கேட்டார்கள். 

அடுத்த நொடி, நான்கு திருக்கரங்களோ டும் திவ்ய ஆயுதங்களோடும் கூடிய திவ்ய மங்கள விக்கிரத்தோடு எம்பெருமான் அவருக்குக் காட்சியளித்தான்.

“வசிஷ்டரின்  பக்திக்கு உகந்து வெண் ணெய் வடிவில் உருகாமல் இருந்த நான் உங்கள் அனைவரின் பக்திக்கும் உகந்து, இந்த  தாமோதர நாராயணத் திருக்கோல த்தில் மாறாமல் எப்போதும் இங்கே எழுந்தருளியிருப்பேன். நீங்கள் என்னைத்  தரிசிக்கலாம்!” என்றான் எம்பெருமான். 

அந்தத் திருத்தலம் தான் நாகப்பட்டினத்து க்கு அருகில் உள்ள  ‘திருக்கண்ணங்குடி’. அங்கே ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாமோதர நாராயண பெருமாள் எழுந்தருளியுள்ளா

சனிக்கிழமை மஹிமை

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள்
கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.

சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.

கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.

“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.

ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.

அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.

கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.

அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு
உகந்த நாட்களாகவும் விளங்குகின்றது

திருச்செந்தூர் தல புராணம்

திருச்செந்தூர், செந்திலாண்டவர் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு முதியவர் ஒருவரை ஆலயத்த்தாரால் அமர்த்தியிருந்தார்கள். இவருக்கு, முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார்.
நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு, வயோதிகத்தின் காரணமாய் சரியான நேரத்திற்கு, இவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர்.
முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார்.
ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார்.
இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அவர் கடலினுள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதலாகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும்……
நில்லுங்கள்!, என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.
அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து, அச்சிறுவன் முன்பு நின்றார்.
கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார்.
இதற்காகவா உயிர் துறப்பார்கள்!, என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள்? என்றான். முதியவர், எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன் சொன்னார்.
நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!, இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான் சிறுவன்.
இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார் முதியவர்.
என்ன? திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா?.. பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே!, என்னால் இது எப்படி சாத்தியமாகும்? என்றார்.
மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும், நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான்.
இதோ, அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான்.
சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர்.
இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல!, இன்று முதல் வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன். முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார்.
முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ?
அழகே உருவான செந்திலாண்டவன் கோலத்துடனே அவன் தெரிந்தானே?
உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து மறைந்தானோ?
தெளிச்சி அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார்.
பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார்.
முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார்.
அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர்.
கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர், மனம் குமுறி, தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார்.
கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.
அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது, அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன.
அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் அவர். வியப்படைந்து போனார். எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே!, என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார்.
நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றிமாலை கவிராயர் என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர்.
கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள்.
உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு, தகுந்த மரியாதையையும் செய்தனர்.
பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.
படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன் முருகன்.
முருகன் மீது அவர் கொண்டிருந்த பக்தி எங்ஙனமாயின், கற்காத ஒருவன் கவியரசனான்

நயினார் கோவில்

நயினார் கோவில்

அற்புதம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து வடகிழக்கில், வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நயினார் கோவில் எனும் திருத்தலம். ஆதிகாலத்தில், ‘சேது நாட்டுத் திருமருதூர்’ என்று பெயர் பெற்றிருந்த இந்தத் தலத்தில்,

ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாளுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி.

விசுவாமித்திர முனிவரால் சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களுக்கு விமோசனம் அருளிய அற்புதமான திருத்தலம் இது.

முன்னொரு காலத்தில் சூரிய வம்சத்தைச் சேர்ந்த திரிசங்கு என்ற மன்னன், பூத உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பினான். இதைத் தன்னுடைய குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் தெரிவித்தான். அவர், ”ஒரு வருட காலம் சிறந்ததொரு வேள்வியை நடத்தினால், தேவர்களே நேரில் வந்து உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று அறிவுறுத்தினார்.

மன்னனோ, ”அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க முடியாது. இப்போதே என்னை பூத உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பும் வல்லமை பெற்றவர்கள் உண்டு. அவர்களை அணுகி எனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறேன்” என்றான். இதனால் வசிஷ்டர் கோபம் கொண்டார். ”குருவை இழிவுபடுத்திய நீ சண்டாளன் ஆகக் கடவாய்!” என்று மன்னனைச் சபித்தார்.

பின்னர், திரிசங்கு விசுவாமித்திர முனிவரைச் சந்தித்து, நடந்ததை விவரித்தான். அவன் மீது இரக்கம் கொண்ட விசுவாமித்திரர், ”வருந்தாதே! பஞ்சாட்சர மந்திரத்தால் உனது சாபத்தை நீக்கி, உனது விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன்” என்று வாக்களித்தார். பிறகு, தனது சீடர்களை அனுப்பி, வசிஷ்டரின் மைந்தர்கள் மற்றும் சீடர்கள் ஆயிரம் பேரை, தான் நடத்தவிருக்கும் வேள்விக்கு உதவி செய்ய வரும்படி அழைப்புவிடுத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் கோபம் கொண்ட விசுவாமித்திரர், அவர்கள் ஆயிரம் பேரையும் வேடர்களாகும்படி சபித்தார். அவர்கள் அனைவரும் விசுவாமித்தி ரரை நேரில் சந்தித்து வணங்கி, சாபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டினர்.

அவர்களிடம், ”என்னை அவமதித்த குற்றத்துக்காக உங்களுக்குச் சாபம் கிடைத்தது. நீங்கள் ஆயிரம் வருடங்கள் வனங்களில் வேடர்களாக அலைந்து திரிந்து, பிறகு மருதூர் சென்று நாக தடம் பதிந்து நற்பதவி பெறுவீர்கள்” என்று வழிகாட்டினார். அதன்பிறகு, தன் மைந்தர்களோடு யாகம் செய்து, அவர் திரிசங்குவை சொர்க்கத்துக்கு அனுப்ப முயற்சித்ததும், தேவர்கள் எட்டி உதைக்க திரிசங்கு அந்தரத்தில் தவித்ததும், பிறகு அவனுக்காகத் தனியே விசுவாமித்திரர் ‘திரிசங்கு சொர்க்கம்’ உருவாக்கிய கதையும் நாமறிந்ததே!

இங்கே, சாபம் பெற்ற ஆயிரம் முனிவர்களும் ஆயிரம் வருடங்கள் வேடர்களாக அலைந்து திரிந்த பிறகு, மருதூர் தலத்துக்கு வந்து ஸ்ரீநாகநாத ஸ்வாமியை வழிபட்டு நற்கதி அடைந்தனர்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராஜேஸ்வரி நாச்சியாரின் நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் அற்நிலையத்துறைப் பராமரிப்பின் கீழ் வரும் இந்த ஆலயம் சிறந்ததொரு பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கிறது.

கருவறையில் லிங்கத் திருமேனியராக மேற்குமுகமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநாகநாத ஸ்வாமி. ஸ்ரீநாமதேவரின் கீதம் கேட்க, ஸ்வாமி மேற்கு முகமாகத் திரும்பியதாக ஐதீகம். ‘நாமதேவர் நல்லிசை கேட்டு போற்றுமவர்க்காய் மேற்றிசை திரும்பியும்…’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள உண்டியல் பச்சை வண்ணத்துடன் திகழ்கிறது. முகம்மதியர்களுக்கான மரியாதை இது என்கிறார்கள். தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. முல்லா சாகிப் என்ற மன்னன் ஒருவன், வாய் பேச இயலாத தன் மகளுடன் ஸ்வாமி சந்நிதிக்கு வருகை தந்தபோது, ‘அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம். இதனால் மகிழ்ந்த முல்லா சாகிப்பும், ‘நீரே நயினார் நிஜம் தெரிந்தேன்!’ என்று ஸ்ரீநாகநாதரைப் போற்றி பூஜித்தாராம். அன்று முதல் இந்தக் கோயில், ‘நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள்.

‘மங்காத முல்லாவின் மகளான ஊமையை வாய் பேச வைத்த லிங்கம்’ என்று நாகாபரணம் என்ற நூலும், ‘முல்லா மகளா மூங்கையள் முன்னாள் அல்லா நயினார் ஆண்டவர் என்ன நல்வாக்குரைத்திடு தன்மை உண்டாக்கியும்’ என்று ஸ்ரீநாகநாதர் சதகமும், ‘தாய் பேசு பேசெனவே சாற்றினும் பேசாமூங்கை வாய் பேச வத்த மகா மந்திரமே…’ என சேதுபதி விறலிவிடு தூது எனும் நூலும் விவரிக்கின்றன. இன்றைக்கும் இஸ்லாமிய அன்பர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் மருதம், வில்வம் என இரண்டு விருட்சங்கள் உள்ளன. ஆலய உட்பிராகாரத்தில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் ‘புற்றடி’ காணப் படுகிறது. மருத மரத்தடியில் ஒரு புற்று இருந்ததாகவும், அதில் நாக ரூபமாக ஸ்வாமி காட்சி தந்ததாகவும் கூறுவர். பக்தர்கள் இந்தப் புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; கோழி முட்டைகள் வைத்துப் பிரார்த்திக்கிறார்கள். இதனால் பிரச்னைகள் யாவும் சூரியனைக் கண்ட பனியாக விலகி ஓடும் என்பது நம்பிக்கை. மேலும், இந்தப் புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் கருணை நாயகியாய்த் திகழ்கிறாள். அம்பாளின் பள்ளியறைக்கு எதிரே அர்த்த மண்டபத்தில், சிறியதொரு மண்டபமும் தடாகமும் உள்ளன. இந்தத் தடாகத்தின் நீர் பிணி தீர்க்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள்.

ஆலயப் பிராகாரத்தில் ஸ்ரீமகாலட்சுமி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆகியோரின் சந்நிதி களைத் தரிசிக்கலாம். ஆலயத்தில் நுழைந்ததும் முகப்பில் கொடிமரத்தை ஒட்டி, ஐந்து தலை நாகம் சிலை வடிவில் காட்சி அளிக்கிறது. இதன் தலையில் உப்பு கொட்டி மக்கள் பிரார்த்திக்கிறார்கள். அனுதினமும் இந்த ஆலயத்தில், முறைப்படி பணம் கட்டி பதிவு செய்து, ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். குழந்தைகளுக்கு முடியெடுப்பதும், காதுகுத்து வைபவமும் நிகழ்கின்றன.

தோஷ நிவாரணம் மற்றும் பிரார்த்தனைத் தலமாகத் திகழும் நயினார் கோவிலுக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.

ஸ்வாமியின் சந்நிதியில் மறு மாங்கல்யம்!

”இங்கே, நிறையப் பணம் செலவழித்து வழிபாடு நடத்தவேண்டும் என்றில்லை. ஸ்ரீநாகநாத ஸ்வாமியை மனதார நினைத்துப் பிரார்த்தித்தாலே போதும், வேண்டுதல் நிறைவேறும்” என்று ஆலயத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் கோயிலின் அறநிலையத்துறை செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி.

”வைகாசி வசந்த திருவிழா இங்கே விசேஷம்! பத்து நாள் பிரம்மோத்ஸவமாக நடைபெறும். ஆடிப்பூரத் திருவிழா 13 நாட்களும், தைப்பூசத் திருவிழா ஒருநாள் தீர்த்த உத்ஸவமாகவும் நடைபெறுகின்றன.

தைப்பூசத்தன்று நயினார் கோயிலில் இருந்து ஸ்வாமியும் அம்மனும் தெற்கே 3 கி.மீ. தூரத்தில், வைகையின் வடகரையில் உள்ள ஸ்ரீகுணதீஸ்வரர் ஆலயத்துக்கு எழுந்தருள்வார்கள். அங்கே ஆற்றில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். இது தவிர, கார்த்திகை மகாதீபமும், நவராத்திரி விழாவும் விமரிசையாக நடக்கும்.

வெகுகாலம் பிரிந்திருந்து பிறகு சமாதானம் ஆகி ஒன்றிணையும் தம்பதியர் இங்கு வருவார்கள். பெண் தன் கழுத்திலிருக்கும் மாங்கல்யத்தைக் கழற்றி ஆலய உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவாள். அதே நேரம் கையில் கொண்டு வந்திருக்கும் புதிய திருமாங்கல்யத்தை ஸ்ரீநாகநாத ஸ்வாமி முன் வைத்து பூஜித்து, ஸ்வாமியின் சார்பாக அர்ச்சகர் அந்த மாங்கல்யத்தைத் தர, அதை அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுவார் பெண்ணின் கணவர். ஸ்ரீநாகநாதர் அருளால் சூட்டப்படும் இந்த மறுமாங்கல்யத்துக்கு மிகுந்த சக்தி உண்டு. இனி, எக்காலத்திலும் அவர்களுக்குள் பிரிவே ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பம்சம்” என்கிறார் தெய்வச்சிலை ராமசாமி.

கோயில் அதிகாலை 5:30 முதல் மதியம் 12:30 மணி வரையிலும் (செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மதியம் 1:30 மணி வரை) திறந்திருக்கும். பிற்பகல் 4 மணிக்குத் திறந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

ராமர் எடுத்த தவகோலம்

பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்!

திருசெந்தூரில் பிறந்தார் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்!

ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம், என்று கட்டளையிட்டார். அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியே அழிந்து போக சபித்து விடுவேன், என்று கூச்சலிட்டார்.
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது. நீ மரமாகப் போ என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன்,அண்ணா…. தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்? என்றார்.

லட்சுமணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய், என்றார். அதன்படியே, திருச்செந்துõர் அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை
தூங்காபுளி என்பர். அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் கண் இமைக்காமல் ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்

நடாதூர் ஆழ்வான்

ஸ்ரீ ராமாநுஜருக்கு முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் என இரண்டு மருமகன்கள் இருந்தார்கள்.
அவர்களுள் நடாதூர் ஆழ்வான் என்பவருடைய பேரன் வரதகுரு.
வரதகுரு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நதியில் தினமும் வேத பாராயணம் செய்து வந்தார்.
ஒருநாள் அவர் வேத பாராயணம் செய்து கொண்டிருக்கையில், அர்ச்சகர் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகப் பால் எடுத்து வந்தார்.
அடுப்பில் இருந்து சுடச்சுடக் கொண்டு வந்ததால், பாலில் இருந்து ஆவி பொங்கி வந்து கொண்டிருந்தது.
அதைக் கண்ட வரதகுரு, “சுவாமி!” என்று அர்ச்சகரை அழைத்து, “அந்தப் பாலை இங்கே தாருங்கள்!” என்றார்.
“இது பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பால்!” என்றார் அர்ச்சகர்.
“அது தெரியும்! இங்கே தாருங்கள்!” எனக் கேட்டு வாங்கினார் வரதகுரு.
ஒரு தாய் எப்படிக் குழந்தைக்குப் பாலை ஆற வைத்துக் கொடுப்பாளோ, அது போல் பாலை ஆற்றி, பொறுக்கக் கூடிய சூட்டுக்கு வந்தபின் அர்ச்சகரிடம் கொடுத்து,“இப்போது பெருமாளுக்கு இதைச் சமர்ப்பிக்கலாம்!” என்றார்.
“ஏன் பாலை ஆற வைத்தீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சகர். அதற்கு வரதகுரு, “பெருமாள் எவ்வளவு மென்மையான,
அழகான திருமேனியை உடையவர்? இவ்வளவு சூடான பாலைக் கொடுத்தால் அவரது நாவைச் சுட்டு விடாதா?” என்று கேட்டார்.
“நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். எம்பெருமானின் நாவில் இருந்து தான் நெருப்பு தோன்றியது என்கிறது வேதம்.
அவ்வாறிருக்க அவரது நாவை இந்தப் பால் எப்படிச் சுடும்? அவர் பரம்பொருள் அல்லவா?” என்று கேட்டார் அர்ச்சகர்.
“அவனது பெருமைகளை நோக்குகையில், அவனது நாவை இந்தப் பால் சுடாது என உணர முடிகிறது.
எனினும் அவனது வடிவழகையும் மென்மையையும் நோக்குகையில், ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டுவது போன்ற
பாசத்தைத் தான் காட்ட முடிகிறதே ஒழிய, அவனது பெருமைகளும் வலிமையும் நம் நெஞ்சில் நிற்பதில்லை!” என்று சொன்னார் வரதகுரு.
வரதகுரு ஆற்றிக் கொடுத்த பாலைப் பெருமாளிடம் கொண்டு சென்றார் அர்ச்சகர்.
அப்போது “அம்மா!” என்றொரு குரல்! எங்கிருந்து அக்குரல் வந்ததென்று ஆவலுடன் எல்லோரும் பார்த்தார்கள்.
என்ன விந்தை? வரதராஜப் பெருமாளே, வரதகுருவை உரத்த குரலில் “அம்மா!” என்று அழைத்திருக்கிறார்.
வியந்து போன அர்ச்சகர், “இந்த வரதகுருவை நீ ‘அம்மா’ என்று அழைத்தாயா?” எனப் பெருமாளிடம் கேட்டார்.
“அனைத்துலகங்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் நான் இருக்கிறேன். அனைத்துயிர்களிடமும் நான் அன்பு காட்டிய போதும்,
அர்ச்சகரே….என்மீது யாரும் இத்தகைய தாய்ப்பாசத்தைக் காட்டியதில்லை. ஆனால் அத்தகைய பாசத்தை இந்த வரதகுரு என்மீது இப்போது காட்டியபடியால், அவரை நான் அம்மா என்றழைத்தேன்!” என்றார் வரதராஜப் பெருமாள்.
அன்று முதல், வரதகுரு என்ற பெயர் மறைந்து ‘நடாதூர் அம்மாள்’ என்றே அனைவரும் அவரை அழைக்கத் தொடங்கினார்கள்.
(அவர் அவதரித்த ஊர் நடாதூர் என்பதால் பெருமாள் தந்த ‘அம்மா’ என்ற பெயரோடு அவர் ஊரை இணைத்து
நடாதூர் அம்மாள் என்று வழங்கப்பட்டார்.)
மறுநாள் அந்த அர்ச்சகர் நடாதூர் அம்மாளிடம், “சுவாமி! எனக்கொரு சந்தேகம். பெருமாள் மேல் அன்பு கொண்டு
நீங்கள் பாலை ஆற வைத்து அவருக்குச் சமர்ப்பித்தீர்கள்.
ஆனால் இத்தனை நாட்களாக நாங்கள் சூடான பாலைத்தான்
பெருமாளுக்குச் சமர்ப்பித்து வந்தோம். அதனால் பெருமாள் கோபம் கொண்டு எங்களுக்கு ஏதாவது தண்டனை தருவாரா?” என்று கேட்டார்.
அதற்கு நடாதூர் அம்மாள், “நிச்சயம் தண்டிக்க மாட்டார். நாம் தினமும் பூஜையைத் தொடங்குகையில் பதினாறு விதமான
உபசாரங்கள் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு, முடிவில் முப்பத்திரண்டு விதமான அபசாரங்களைத் தான் செய்கிறோம்.
ஆனால் அதையும் பெருமாள் பொறுத்தருள்கிறார். அவ்வாறே சூடான பாலை நீங்கள் சமர்ப்பித்தாலும் அதற்காகப்
பெருமாள் கோபம் கொள்ள மாட்டார். பயப்படாதீர்கள்!
தண்ணீருக்கும் சந்திரனுக்கும் எப்படிக் குளிர்ச்சி என்பது இயற்கையாகவே உள்ளதோ,
அது போல பெருமாளுக்கும் பொறுமை எனும் குணம் இயற்கையாகவே உள்ளது!” என்று கூறினார்

காயத்ரீ மகிமை

காயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் சாஸ்திரிகள் குடும்பத்துடன் ரயிலில் பயணிக்கும்போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது.
சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!
ரயில் கிளம்பும் நேரம் ஆனதும் Guard பச்சைக்கொடி காட்ட Angloindian driver ரயிலை Start செய்ய தயாரானார். விசிலும் அடித்தார்.
இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்றுகொண்டார்!
இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய Driverம் ஏதோ Technical snag என்று SM / guard ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார்.
இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை start. செய்ய மீண்டும் ஒருமுறை Driver முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது!

சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது
அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக்கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை
விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து
அவர் நமக்கு சொல்லும் பாடம்
நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே
உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது

பௌர்ணமியின் சிறப்பு

பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதத்தில் வரும் பௌர்ணமியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமி – சித்ரகுப்தனின் பிறந்தநாள்.

வைகாசி பௌர்ணமி – முருகனின் பிறந்தநாள்.

ஆனிப் பௌர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.

ஆடிப் பௌர்ணமி – திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.

ஆவணிப் பௌர்ணமி – ஓணம், ரக்ஷபந்த திருநாள்.

புரட்டாசி பௌர்ணமி – உமாமகேசுவர பூஜை உகந்த நாள்.

ஐப்பசி பௌர்ணமி – சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.

கார்த்திகைப் பௌர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.

மார்கழிப் பௌர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.

தைப் பௌர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.

மாசிப் பௌர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.

பங்குனிப் பௌர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள்